இவ்ளோ நாள் வீட்டில் இருந்தும் அடங்காத வடிவேலு... சந்திரமுகி 2-வில் கட் சொன்ன டைரக்டர்..?
சென்னை: பலவித சர்ச்சைகளுக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார் வடிவேலு.
அதிக எதிர்பார்ப்புகளுடன் கடந்த டிசம்பரில் வெளியான அவரது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் நெகட்டிவான விமர்சனங்களுடன் தோல்வியை சந்தித்தது.
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை லைகா புரோடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 படங்களில் வடிவேலுவின் நடிப்பை காண ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.

கம்பேக் கொடுத்த வைகைப்புயல்
தனித்துவமான காமெடி நடிகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் வடிவேலு. இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் ஹீரோவாக நடித்த பின்னர், நடித்தால் நாயகன் தான் என முடிவெடுத்தார். இதனையடுத்து ஹீரோவாக நடித்த வடிவேலுவுக்கு, எதுவுமே கை கொடுக்கவில்லை. இதனிடையே 24ம் புலிகேசி படத்தில் கமிட்டான வடிவேலு, கால்ஷீட் பிரச்சினையால் ரெட் கார்டு பஞ்சாயத்து வரை சென்று வீட்டுக்குள்ளே முடங்கினார். இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பரில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

கை கொடுக்காத நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கிய நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் கடந்தாண்டு டிசம்பரில் வெளியானது. காமெடி ஜானரில் உருவான இந்தப் படம் நெகட்டிவான விமர்சனங்களால் படுதோல்வியடைந்தது. இதனால் மீண்டும் காமெடி கேரக்டரில் மட்டுமே நடிக்கலாம் என முடிவெடுத்தார் வைகைப்புயல். அதேநேரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து முடித்தார். இந்தப் படத்தில் வடிவேலுவின் கேரக்டர் தான் மாமன்னன் என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதி, வடிவேலுவுடன் கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரமுகி 2-வில் வடிவேலு
இந்நிலையில், வடிவேலு தற்போது ராகவா லாரன்ஸுடன் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். பி வாசு இயக்கி வரும் இந்தப் படத்தில் கங்கனா ராவத், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் கமிட் ஆகியுள்ளனர். முக்கியமாக கங்கனா ராவத்தின் காட்சிகள் இந்த வாரம் முதல் எடுக்கப்பட்டு வருவதாக படக்குழு அப்டேட் கொடுத்திருந்தது. சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினியும் வடிவேலும் காமெடியில் கலக்கியிருந்தனர். அதனால் இரண்டாம் பாகத்தில் வடிவேலுவின் காமெடி இன்னும் அதகளமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

கட் சொன்ன டைரக்டர்
சில வாரங்களுக்கு முன்னர் சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு காமெடி கலாட்டா செய்த வீடியோவும் வெளியாகி வைரலானது. இந்நிலையில், சந்திரமுகி 2 படப்பிடிப்புக்கு வடிவேலு சரியான நேரத்தில் வராமல் இழுத்தடிப்பதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் காலை 9 மணிக்கு என்றால், 10 மணிக்கு வருவதாக சொல்வதாகவும். பின்னர் 11 மணிக்குள் வருகிறேன் என்று கூறுவதாக தெரிகிறது. மேலும், 12 மணிக்குள் வந்துவிடுகிறேன் என கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிடுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கிய வடிவேலு ஷூட்டிங்கில் இப்படி செய்யலாமா என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











