twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயவு செய்து யாரும் இப்படி செய்யாதீங்க: கெஞ்சிக் கேட்டுக் கொண்ட ராகவா லாரன்ஸ்

    By Siva
    |

    சென்னை: ரசிகர் ஒருவர் செய்த காரியத்தால் ராகவா லாரன்ஸ் விமர்சனத்திற்குள்ளாாகியுள்ளார்.

    ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்த காஞ்சனா 3 படம் நேற்று முன்தினம் வெளியானது. படம் ஓடும் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டுள்ள ராகவா லாரன்ஸின் கட்அவுட்டுக்கு ரசிகர் ஒருவர் செய்த காரியத்தை பார்த்து பலரும் கோபம் அடைந்துள்ளனர்.

    கடவுளுக்கு செய்யும் நேர்த்திக்கடன் போன்று அந்த ரசிகர் ராகவா லாரன்ஸ் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளார்.

    வரிசையில் நிற்காத அஜித்தை திட்டிய பெண்: வைரல் வீடியோ வரிசையில் நிற்காத அஜித்தை திட்டிய பெண்: வைரல் வீடியோ

    நவீன்

    ரசிகர் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு பாலாபிஷேகம் செய்த வீடியோவை பார்த்த இயக்குநரும், நடிகருமான நவீன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 'இது போன்ற மூடத்தனத்தையும் முட்டாள் ரசிகர்களையும் வளர்ப்பதால் நடிகர்கள் வளரலாமே தவிர நாடு வளராது. இதை தடுப்பது சம்மந்தப்பட்ட நடிகர்களின் முக்கிய கடமையாக கருத வேண்டும். நீங்கள் மனிதநேயமிக்க நல்ல மனிதர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டம் இது .

    ராகவா லாரன்ஸ்

    கட்அவுட் வைத்து மாலை போட்டு பாலாபிஷேகம் செய்வது சரி, ஆனால் இந்த அளவுக்கு இருக்கக் கூடாது. இனி இது போன்று நடக்காமல் இருக்க ராகவா லாரன்ஸ் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நல்ல மனுஷன் நிச்சயம் செய்வார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

    விளாசல்

    யாரோ ஒரு ரசிகர் ஆர்வக்கோளாறில் இப்படி செய்ய ராகவா லாரன்ஸ் பெயர் கெடுகிறது. தன் ரசிகர்கள் இப்படி செய்வதை அவர் ஒருபோதும் விரும்ப மாட்டார்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    காஞ்சனா 3 நல்ல வசூல் செய்து கொண்டிருப்பதால் ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சியில் உள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்துவிட்டு அவர் வேதனை அடைந்துள்ளார்.

    வேண்டாம்

    தன் மீது உள்ள பாசத்தை காட்ட ரசிகர்கள் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

    English summary
    Raghava Lawrence is getting crticised because of his fan's behaviour.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X