பதிலுக்குப் பதில்.. ரஜினி வில்லனை பேயை காட்டி மிரட்டப்போகும் ராகவா லாரன்ஸ்!
இந்தியில் ரீமேக்காகும் காஞ்சனா திரைப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்குகிறார்.
சென்னை : காஞ்சனா இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் இயக்குனாராக அடியெடுத்து வைக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸ், லட்சுமி ராய், கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்த படம் காஞ்சனா. கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான படமாகும்.
ராகவா லாரன்ஸ், கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி ஆகியோரின் காமெடியும், திகில் நிறைந்த காட்சிகளும் படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவின. அதுபோல், இந்த படத்தில் திருநங்கையாக நடித்து சரத்குமார் சர்ப்ரைஸ் கொடுத்தார்.

வெற்றிப்படம்:
முனி படத்தின் வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கிய படம் தான் காஞ்சனா. இந்த படமும் வெற்றியடைந்ததால், காஞ்சனா இரண்டாம் பாகத்தை லாரன்ஸ் இயக்கினார். அதுவும் வெற்றி படமாக அமைந்ததால், தற்போது காஞ்சனா மூன்றாம் பாகத்தை அவர் இயக்கி வருகிறார்.

ரீமேக்:
இந்நிலையில் காஞ்சனா முதல் பாகம் இந்தியில் ரீமேக்காகிறது. இந்த படத்தையும் ராகவா லாரன்ஸ் தான் இயக்குகிறார். படத்தின் ஹீரோவாக அக்ஷய் குமார் நடிக்கிறார். சரத்குமார் வேடத்தில் நடிக்க, பிரபல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

ஏப்ரலில் படப்பிடிப்பு:
அதேபோல், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்க உள்ளது.

கமல் வில்லன் :
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அக்ஷய்குமார் தமிழில் 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக அறிமுகமானவர். இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக அவரையே நடிக்க வைக்க ஷங்கர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் தனது காஞ்சனா படத்தில் அக்ஷயை நடிக்க வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











