எல்லாம் ரெடி.. ராகவா லாரன்ஸ் வந்தால் போதும்.. எந்த துறை அமைச்சர் தெரியுமா?.. இப்படி அடிக்கிறாங்களே
சென்னை: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடன அமைப்பாளர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். பிறகு ஹீரோவாக மாறி சில ஹிட் படங்களை கொடுத்தார். கடந்த பல வருடங்களாகவே அவர் பலருக்கும் பல உதவிகளை செய்துவருகிறார். இந்நிலையில் தான் அரசியலுக்கு வருகிறேன் என்றும்; நான் வரலாமா வேண்டாமா என்பதை ரசிகர்கள் சொல்லுங்கள் எனவும் கூறியிருந்தார்.
நடன அமைப்பாளரான ராகவா லாரன்ஸ்; அற்புதம் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனையடுத்து முனி திரைப்படத்தில் நடித்து ஹிட் ஹீரோவாக மாறினார். தொடர்ந்து அவர் இயக்கி நடித்த காஞ்சனா பட சீரிஸ் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. பாலிவுட்டிலும் ரீமேக் ஆனது. இதனால் பிஸியான ஹீரோவாக மாறினார். அடுத்தடுத்து நடிப்பதற்கும் அவர் கைவசம் எக்கச்சக்க படங்கள் இருக்கின்றன.

உதவி செய்யும் லாரன்ஸ்: இது ஒருபக்கம் இருக்க யாரும் இல்லாத குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பது, ஏழை மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வது என லாரன்ஸ் இந்த சமூகத்தில் முக்கிய பங்காற்றிவருகிறார். அவர் வளர்த்த குழந்தைகள் எல்லாம் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். அதுவே அவருக்கு பலரிடம் பெரிய பாராட்டை பெற்றுக்கொடுத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
லாரன்ஸின் வீடியோ: சூழல் இப்படி இருக்க ராகவா லாரன்ஸ் தவெகவில் இணைந்து திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களம் காணவிருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வந்தன. இந்நிலையில் இன்று அவர் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், "திருச்சி கிழக்கு தொகுதியில் நான் நிற்க வேண்டுமென்றால் அரசியலுக்கு வர வேண்டும். நான் சமூக சேவைகள் செய்துவருகிறேன். கஷ்டப்படுபவர்களுக்கு உதவுகிறேன்.
ஜல்லிக்கட்டு போராட்டம்: அப்போதுதான் ஜல்லிக்கட்டு போராட்டம் வந்தது. அங்கு சென்று சாப்பாடு கொடுத்தேன். அதுதான் அரசியல் தொடக்கமாக இருந்தது. ரஜினி குறித்து சீமான் நிறைய விமர்சித்தார். நான் ரஜினியிடம், 'அண்ணே, அவர் ஓவராக பேசுகிறார்' என கூறினேன். ரஜினியோ என்னிடம் அமைதியாக இருக்க சொன்னார். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னதும் தலை மேல் கையை வைத்து உட்கார்ந்துவிட்டேன். ஒருநாள் அம்மாவிடம், என்னுடைய அரசியல் என்ட்ரி கொடுத்து சொன்னேன்.
விஜய் பற்றி: அவர் முகம் சட்டென்று மாறிவிட்டது. எழுந்து சென்றுவிட்டார். இரண்டு, மூன்று நாட்கள் என்னிடம் பேச மறுத்துவிட்டார். நான் அரசியலுக்கு வருவதை அம்மா விரும்பவில்லை. விஜய் அரசியலுக்கு வந்தபோது அம்மாவிடம் சென்று, 'நண்பர் வருகிறார்' என கூறினேன்.விஜய் கடின உழைப்பாளி. அம்மாவிடம் மீண்டும் கேட்டேன். அவர் மீண்டும் வேண்டாம் என்றுதான் சொன்னார். விஜய்யிடமும் சொல்கிறேன் என கூறினார். தேர்தல் முடிவுகள் வந்ததும், அம்மாவிடம் பேசினேன். அதற்கு அவர், விஜய் அனைத்தையும் மாற்றிவிட்டார் என கூறி; அரசியலுக்கு வர அனுமதி கொடுத்தார். அம்மா ஓகே சொல்லிவிட்டார். ரசிகர்களாகிய நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என கமெண்ட்ஸ் செய்யுங்கள்" என கூறியிருந்தார்.
லாரன்ஸுக்கு அமைச்சர் பதவி: அவர் அரசியலுக்கு வரலாம், வர வேண்டாம் என பல கருத்துக்கள் வருகின்றன. அவர் என்ன முடிவெடுக்கப்போகிறாரோ?.. இந்நிலையில் புதிய புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது அரசியலுக்கு வருவதாக அவர் அறிவித்தவுடனேயே, 'ராகவா லாரன்ஸ்.. ஆவிகள் மற்றும் பேய், பிசாசு நலத்துறை அமைச்சர்' என குறிப்பிட்டு லாரன்ஸ் ஃபோட்டோவை வைத்து எடிட் செய்திருக்கிறார்கள். இந்தப் புகைப்படத்தை பார்த்த பலரும், என்னங்க இவ்வளவு ஸ்பீடாக இருக்கீங்க கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
