Rudhran : ‘ருத்ரன்’ படத்தில் பல கெட்ட வார்த்தைகள்... கேட் போட்ட தணிக்கை குழு!

சென்னை : ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தில் ஏராளமான கெட்டவார்த்தைகள் இருந்ததால், தணிக்கைக்குழு பல இடங்களில் மியூட் போட்டு அதை கத்திரித்துள்ளது.

ருத்ரன் படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகிறார்.

இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், நாசர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Raghava Lawrences Rudhran is certified UA by the censor board

ருத்ரன் : நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் இப்படத்தில் லீட்ரோலில் நடித்துள்ளார். இப்படம் பான் இந்தியத் திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் ஏப்ரல் 14ந் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக உள்ளது.

அசத்தலான இசை : ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. வழக்கமாக லாரன்ஸ் படத்தில் ஒரு ரீமேக் பாடல் இடம் பெறும் அந்த வகையில் இந்த படத்திலும் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. படத்தின் டிரைலர் அண்மையில் வெளியான நிலையில், டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Raghava Lawrences Rudhran is certified UA by the censor board

மிரட்டலான வில்லன் சரத்குமார் : அந்த டிரைலரை பார்க்கும் போது பல காட்சிகள் காஞ்சனா படத்தை பார்ப்பது போல உள்ளது. அதே மாதிரி ஒரு குத்து பாட்டு, ஒரு டூயட் பாடல், கிளைமாக்ஸில் ஒரு சாமி பாட்டு அதில் பயங்கரமான சண்டை இதைப் பார்க்கும் போது கதையில் புதுசா எதுவுமே இல்லை என்று தான் தோன்றுகிறது. இருந்தாலும், சரத்குமார் படத்தில் இருப்பது கூடுதல் பலமாக இருக்கிறது. தம்மு, தண்ணி, கஞ்சா எல்லாத்தையும் விட பெரிய போதை எது தெரியுமா? பணம் என்று ஆக்ரோஷமாக கர்ஜிக்கும் சரத்குமார் வில்லத்தனத்தில் மிரள வைக்கிறார்.

Raghava Lawrences Rudhran is certified UA by the censor board

பல இடத்தில் கெட்டவார்த்தை : இந்த நிலையில் ருத்ரன் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. ருத்ரன் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் படத்தில் பல இடங்களில் கெட்டவார்த்தை இடம்பெற்றுள்ளதால், தணிக்கைக்குழு அவற்றுக்கு மியூட் போட்டு கத்திரித்துள்ளது.மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே கொண்டதாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X