சந்தோஷத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் படக்குழு.. ருத்ரன் முதல் ஷெட்யூல் ஓவராம்!
சென்னை: காஞ்சனா 3 படத்துக்கு பிறகு நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ருத்ரன் படத்தின் முதல் ஷெட்யூல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தயாரிப்பாளர் கதிரேசன் இந்த படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் படம்
காஞ்சனா 3 படத்தை இயக்கி நடித்த ராகவா லாரன்ஸ், பாலிவுட்டில் அக்ஷய் குமார், கியாரா அத்வானியை வைத்து லக்ஷ்மி படத்தை இயக்கினார். காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக பாலிவுட்டில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ருத்ரன்
இந்நிலையில், தமிழில் ஏகப்பட்ட படங்களில் கமீட் ஆகி உள்ள ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளதாக படத்தின் கதாசிரியர் கே.பி. திருமாறன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் படக்குழுவினருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

எதையும் மாற்றவில்லை
ருத்ரன் படத்தின் கதையை ராகவா லாரன்ஸிடம் நான் எப்படி சொன்னேனோ இப்போது வரை கதை அப்படியே உருவாகி வருவது தனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை அளிக்கிறது என கே.பி திருமாறன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்போ எல்லாம் பெரிய நடிகர்களுக்கு கதை சொன்னாலே, அந்த படத்தை அவர்கள் இஷ்டத்துக்கு மாற்றி விடும் நிலையில், லாரன்ஸ் அப்படி செய்யவில்லை என்றும் அவருக்கு நன்றி கூறியுள்ளார்.

புது ஜோடி
வைபவ், கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, அருண் விஜய், ஹரிஷ் கல்யாண், அசோக் செல்வன் என ஏகப்பட்ட நடிகர்களுடன் நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் முதல் முறையாக நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன் படத்தில் இணைந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இருவரும் ருத்ரன் பட பூஜையில் கலந்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

மீண்டும் சரத்குமார்
காஞ்சனா படத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸின் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதே போல நடிகர் நாசரும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார். வித்தியாசமான திரைக்கதையில் உருவாகி வரும் ருத்ரன் திரைப்படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரமுகி 2 என்னாச்சு
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும், ரங்கஸ்த்தலம் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், தற்போது ருத்ரன் படத்தில் மட்டும் தான் லாரன்ஸ் மொத்த கவனத்தையும் செலுத்தி வருவதாக கூறுகின்றனர். சந்திரமுகி 2 இந்த படம் முடிந்த பின்னர் தொடங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











