விரைவில் ருத்ரன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்.. ரீமிக்ஸாக வெளியாக இருப்பதாக அப்டேட்!

சென்னை : நடிகர் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவருகிறது ருத்ரன் படம்.

நடன இயக்குநராக தன்னுடைய கேரியரை துவங்கிய ராகவா லாரன்ஸ், தற்போது நடிகராக பட்டையை கிளப்பி வருகிறார்.

தற்போது சந்திரமுகி 2, ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ளன.

நடிகர் ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் நடன இயக்குநராக தன்னுடைய கேரியரை துவக்கி விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்துள்ளார். விஜய்யுடன் இணைந்து தாம் தக்க போன்ற பாடல்களுக்கு இவர் அமைத்த நடனம், தற்போதும் ரசிகர்களின் பேவரிட்டாக உள்ளது. தொடர்ந்து நடிகராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் ராகவா லாரன்ஸ்.

காஞ்சனா படங்களில் லாரன்ஸ்

காஞ்சனா படங்களில் லாரன்ஸ்

காஞ்சனா படங்களின் பாகங்களில் நடிகராகவும் இயக்குநராகவும் தன்னை வெளிப்படுத்தி ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளார் ராகவா லாரன்ஸ். தொடர்ந்து தற்போது மற்ற இயக்குநர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். சந்திரமுகி 2 படத்தில் இயக்குநர் வாசு இயக்கத்தில் இணைந்துள்ளார்.

சந்திரமுகி 2 படத்தில் லாரன்ஸ்

சந்திரமுகி 2 படத்தில் லாரன்ஸ்

முன்னதாக ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு என முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தில்தான் தற்போது லாரன்ஸ் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் மைசூரு, ஐதராபாத் போன்ற இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரிலீசுக்கு தயாராகும் ருத்ரன் படம்

ரிலீசுக்கு தயாராகும் ருத்ரன் படம்

இதனிடையே, லாரன்சின் ருத்ரன் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டில் வெளியான நிலையில், தற்போது படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விரைவில் பர்ஸ்ட் சிங்கிள்

விரைவில் பர்ஸ்ட் சிங்கிள்

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் முதல் பாடல், ரீமிக்ஸாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள ரீமிக்ஸ் பாடல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ள படக்குழு, வரைவில் ருத்ரன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், ரீமிக்ஸாக வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X