சந்திரமுகி ரிலீஸ் இருக்கட்டும்.. லாரன்சோட ருத்ரன் படம் எப்ப ரிலீஸ் தெரியுமா.. தள்ளிப்போகும் ரிலீஸ்!
சென்னை : நடிகர் ராகவா லாரன்ஸ் நடன இயக்குநராக பல படங்களை முன்னணி நடிகர்களுக்காக கொடுத்தவர்.
ஒரு கட்டத்தில் நடிக்கத் துவங்கிய இவர் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் தன்னை உயர்த்திக் கொண்டார்.
தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பி வாசுவின் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் நடன இயக்குநராகவே தன்னுடைய கேரியரை துவக்கினார். விஜய்யுடன் இணைந்து தாம் தக்க தையத்தக்க பாடலுக்கு இருவரும் போட்ட ஆட்டத்தை மறக்க முடியும். இன்றளவும் விஜய் ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட் பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்தவர் ராகவா லாரன்ஸ்.

நடன இயக்குநர்
தொடர்ந்து கொரியோகிராபராக இந்திய அளவில் தன்னுடைய முத்திரையை பதித்த ராகவா லாரன்ஸ், அத்துடன் நின்று விடவில்லை. நடிப்பிலும் தனது கவனத்தை துவக்கினார். தொடர்ந்து, இயக்கம், தயாரிப்பு, இசை என தன்னுடைய பன்முகத் திறமையை கோலிவுட்டில் பதித்தார். அனைத்திலும் சிறப்பான தனது திறமையை வெளிப்படுத்தினார்.

காஞ்சனா படங்கள்
அடுத்தடுத்து காஞ்சனா சீரிஸ் படங்களை கொடுத்த ராகவா லாரன்ஸ் தற்போது பி வாசுவின் இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். சந்திரமுகி படத்தில் ரஜினி லீட் கதாபாத்திரத்தில் நடித்த நிலையில், அந்த கேரக்டரில் தற்போது ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார்.

சந்திரமுகி 2 படம்
இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டு முதல் கட்ட சூட்டிங் மைசூருவில் நடைபெற்றது. விரைவில் இரண்டாவது கட்ட சூட்டிங் நடைபெறவுள்ளது. இவரது நடிப்பில் அடுத்ததாக அதிகாரம் படத்தின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அறிமுக இயக்குநர் கதிரேசன் இயக்கத்தில் லாரன்ஸ் நடித்துவரும் ருத்ரன் படத்தின் சூட்டிங்கும் நடைபெற்று முடிந்துள்ளது.

ரிலீஸ் தள்ளிப்போகும் ருத்ரன் படம்
இந்தப் படம் டிசம்பரில் கிறிஸ்துமசையொட்டி 23ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டையொட்டி படம் ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய வேடத்தில் சரத்குமார்
தயாரிப்பாளர் கதிரேசன் தனது பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் ராகவா லாரன்சிற்கு பிரியா பவானி சங்கர் ஜோடியாகியுள்ளார். த்ரில்லர் வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











