Rudhran Twitter Review: ருத்ரன் விமர்சனம்.. ராகவா லாரன்ஸ் ருத்ர தாண்டவம் ஆடினாரா? இல்லையா?
சென்னை: இயக்குநர் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி உள்ள ருத்ரன் திரைப்படம் கடைசி நேரத்தில் தடை நீக்கப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் 1500 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.
இந்த தமிழ்ப் புத்தாண்டுக்கு தமிழில் முன்னணி ஹீரோக்கள் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அந்த ஸ்பேஸை நடிகர் ராகவா லாரன்ஸ் பயன்படுத்திக் கொண்டார்.

ஆக்ஷன் சரவெடியாக வெளியாகி உள்ள ருத்ரன் திரைப்படம் ருத்ர தாண்டவம் ஆடியதா? இல்லையா? என்பதை ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் கொடுத்துள்ள விமர்சனங்களை இங்கே பார்ப்போம்..
புத்தாண்டு வாழ்த்து சொன்ன ராகவா லாரன்ஸ்: நடன இயக்குநராக இருந்த ராகவா லாரன்ஸ் ஹீரோவாகவும் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். அவரது நடிப்பில் வெளியாகி உள்ள ருத்ரன் திரைப்படத்தை பார்த்து இந்த தமிழ் புத்தாண்டை ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்கிற கோரிக்கையுடன் அனைத்து ரசிகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் என தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

மாஸ் படம் மிஸ் பண்ணிடாதீங்க: படம் வேறலெவல்ல இருக்கு அதுவும் கிளைமேக்ஸ் சீனுக்காகவே இந்த படத்தை பார்க்கலாம். ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நல்லா நடிச்சிருக்காங்க என படத்தை பார்த்து விட்டு வெளியே வந்து கருத்து சொல்லும் ரசிகர்கள் மாஸ் படம் மிஸ் பண்ணிடாதீங்க என பேசி உள்ளனர்.

அகோரிகள் ஆட்டம்: ருத்ரன் படத்தின் FDFS கொண்டாட்டங்கள் தியேட்டர்களில் களைகட்டி உள்ளன. உலகம் முழுவதும் 1500 ஸ்க்ரீன்களில் இந்த படம் வெளியாகி உள்ள நிலையில், பிரபல தியேட்டர் ஒன்றில் அகோரிகள் போலவே ரசிகர்கள் வேடமணிந்து வந்து ஆட்டம் போட்டுள்ள வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன.

செகண்ட் ஹீரோ இவர் தான்: ராகவா லாரன்ஸ் தான் இந்த படத்தின் ஹீரோவாக இருந்தாலும், படத்தில் வரும் பகைமுடி பாடல் இரண்டாவது ஹீரோவாகவே உள்ளது. தாராளமாக தியேட்டரில் இந்த படத்தை பார்க்கலாம் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

ருத்ரன் 2 லோடிங்: ருத்ரன் படத்தின் கிளைமேக்ஸில் ருத்ரன் பார்ட் 2வுக்கான லீட் உடன் முடித்துள்ளதாகவும் நெட்டிசன்கள் படம் தீயாக இருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம் இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் எல்லாம் பார்க்கும் போது பாலய்யா படமே தோற்றுவிடும் என்றும் தெலுங்கில் ருத்ரன் செம ஹிட் அடிக்கும் என்றும் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











