Chandramukhi 2 - சந்திரமுகி 2 படத்தில் லாரன்ஸ் வாங்கிய சம்பளம் இவ்வளவா?.. லேட்டஸ்ட் தகவல் இதோ

சென்னை: Chandramukhi 2 (சந்திரமுகி 2) சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் மணிசித்திரதாழு படம் வெளியானது. அந்தப் படத்தின் ரீமேக் உரிமையை பெற்று பி.வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் எடுத்தார். பிறகு கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோரின் நடிப்பில் தமிழில் வெளியானது. 800 நாட்களுக்கு மேல் ஓடி பெரும் சாதனை படைத்தது. சாதாரண பேய் பட லைனாக இருந்தாலும் பி.வாசுவின் மேக்கிங் படத்தில் அதகளமாக இருந்தது. இதனால் அப்போதைய கிட்ஸுக்கு சந்திரமுகி எப்போதுமே ஃபேவரைட்.

Raghava Lawrence Salary Details in Chandramukhi 2 Movie

ஜோதிகா: படத்தின் வெற்றிக்கு பாடல்கள், வடிவேலுவின் காமெடி எல்லாம் உதவின. இருப்பினும் படத்தில் குறிப்பிடப்பட வேண்டியது ஜோதிகாவின் நடிப்பை. கங்கா என்ற கதாபாத்திரத்தில் சாந்தமாக இருக்கும் ஜோதிகா சந்திரமுகி கதாபாத்திரத்தில் விஸ்வரூபம் எடுத்தார். சந்திரமுகியாக அவர் காட்டிய முக பாவனைகள், வசன உச்சரிப்புகள் என அனைத்தும் ஜோதிகா எனும் மிகச்சிறந்த நடிகையை நீண்ட நாள்கள் கழித்து ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது.

சந்திரமுகி 2: இந்தச் சூழலில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. இதில் லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இன்று உலகம் முழுவதும் படம் வெளியானது. சந்திரமுகி படத்தின் முதல் பாகம் போல் இருக்குமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றனர்.

நல்ல ரெஸ்பான்ஸ்: படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸையே கொடுத்துவருகின்றனர்.குறிப்பாக பி.வாசு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். இரண்டாவது பாதியில் கங்கனா ரணாவத் ஒட்டுமொத்தமாக ஸ்கோர் செய்துவிட்டார். வடிவேலு தரமான கம்பேக் கொடுத்திருக்கிறார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

லாரன்ஸ்: அதேபோல் நடிகர் ராகவா லாரன்ஸ் ராஜா கேரக்டருக்கு பக்காவாக செட் ஆகியிருக்கிறார் என்றும் கீரவாணி அட்டகாசமாக பின்னணி இசை அமைத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் புகழ்கின்றனர். இந்நிலையில் லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்துக்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் 15 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X