Don't Miss!
- News
கோவிலை இடித்ததாக டிஆர் பாலுவின் கட் & பேஸ்ட் வீடியோ.. அண்ணாமலைக்கு டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்!
- Lifestyle
பிப்ரவரியில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்கு நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படப் போகுது...
- Sports
"இவ்வளவு நாளா இது தெரியலையே.. இஷான் கிஷானுக்கு நிறைய விஷயம் தெரியல".. கவுதம் கம்பீர் கடும் விளாசல்!
- Technology
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
- Finance
ஹிண்டர்ன்பர்க் சரியான ஆய்வு செய்யவே இல்ல.. எல்லாம் தவறு.. அதானி குழுமம் ஒரே போடு..!
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
ருத்ரன் ஷூட்டிங் ஸ்பாட்… சர்ப்ரைஸ் கொடுத்த ராகவா லாரன்ஸ் !
சென்னை : ருத்ரன் படப்பிடிப்புத் தளத்திற்கு ஆசிரமக்குழந்தைகளை அழைத்துச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ராகவா லாரன்ஸ்.
இணையத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
நடிக்க
வந்து
டப்பிங்
ஆர்டிஸ்ட்
ஆன
மதன்
மகாராஜா...
இந்த
பிரபல
ஹீரோக்களுக்கு
இவர்தான்
வாய்ஸ்!

ருத்ரா
நடன இயக்குனர், நடிகர்,இயக்குனர் என பன்முகத் தன்மைக்கொண்டவர் ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரா படத்தில் நடித்து வருகிறார். பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றிப்படங்களைத் தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ். கதிரேசன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இசை
ராகவா லாரன்ஸுடன் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். கேபி திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் ருத்ரன் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
நாசர்,பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கியது. கொரோனா 2வது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. சண்டைக்காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

சர்ப்ரைஸ்
இந்நிலையல் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளை ருத்ரா படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், என் செல்ல குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை அனைவரும் விரும்பி பகிர்ந்து வருகின்றனர்.

சந்திரமுகி 2
ராகவா லாரன்ஸ் வெற்றிமாறன் கதை, தயாரிப்பில் உருவாக உள்ள அதிகாரம் படத்திலும் நடிக்க உள்ளார். இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்க உள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், பி வாசுவின் இயக்கத்தில் சந்திரமுகி பாகம் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
-
தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் நடிகர் தாரகா ரத்னா... பாலய்யா, ஜூனியர் NTR மருத்துவமனைக்கு விசிட்
-
Ayali Web Series Review: வயசுக்கு வந்ததையே மறைத்து ஊரைத் திருத்த போராடும் தமிழ்.. அயலி விமர்சனம்!
-
போட்டோ, பெயர் பயன்படுத்த தடை... அப்ப மட்டும் இப்படி சொல்லலையே: ரஜினியிடம் கேள்வியெழுப்பிய பிரபலம்