ரஜினி என் கூட பேசாட்டியும் பரவாயில்ல.. தர்பார் மேடையில் படுஆவேசமாக அரசியல் பேசிய நடிகர் லாரன்ஸ்!

சென்னை: தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் படு ஆவேசமாக அரசியல் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் இந்தி நடிகர் சுனில்ஷெட்டி, யோகி பாபு, ஏஆர் முருகதாஸ், விவேக், ராகவா லாரன்ஸ், அருண்விஜய், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

பதிலடி கொடுப்பேன்

பதிலடி கொடுப்பேன்

நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ராகவா லாரன்ஸ், மிகவும் ஆவேசமாக அரசியல் பேசினார். அரசியலை நாகரிகமே இல்லாமல் சிலர் பேசுகின்றனர். ரஜினி பற்றி யார் தவறாக பேசினாலும் நான் பதிலடி கொடுப்பேன் என கோபமாக கூறினார். மேலும் அவர் பேசியதாவது,

நாட்டுக்கு நல்லதல்ல

நாட்டுக்கு நல்லதல்ல

நான் இந்த மேடையில் இப்படி பேசினதுக்கு ரஜினி என்னிடம் பேசாமல் போனாகூட பரவாயில்லை. ஆனால் அவர் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல என ஒரு அரசியல் கட்சி ஒருங்கிணைப்பாளரை எச்சரித்தார்.

கமல் போஸ்டரில் சாணி

கமல் போஸ்டரில் சாணி

மேலும் பேசிய லாரன்ஸ், சிறு வயதில் கமல் போஸ்டரில் சாணி அடிப்பேன், இருவரும் இப்போது இணைந்திருப்பதை பார்க்கும்போது ஏதோ மாற்றம் ஏற்படப்போகிறது என்று தோன்றுகிறது.

பொக்கிஷம் ரஜினிதான்

பொக்கிஷம் ரஜினிதான்

அதிசயம் அற்புதம் . இந்த இரண்டு வார்த்தையால் தமிழ்நாடே அதிர்ந்து விட்டது. பல காலமாக இருக்கும் வார்த்தை. ஆனால், அவர் சொன்னவுடன் அதற்கு மதிப்பு கூடி விட்டது. அதிசயம், பொக்கிஷம் ரஜினிதான்.

காரணம் உண்டு

காரணம் உண்டு

கடவுள் காரண காரியத்தோடுதான் அனைவரையும் படைப்பார், ரஜினி படைப்பிற்கும் ஒரு காரணம் உண்டு. கடைசி வரிசையில் அமர வேண்டிய நான் முதல் வரிசையில் அமர்ந்துள்ளதற்கு காரணம் ரஜினிதான்.

விருப்பமில்லை

விருப்பமில்லை

வயது அதிகம் என்கிறார்கள் அவர் நடக்கும் போது தெரியும். முன்னரே ஏன் வரவில்லை என்கிறார்கள், அப்போது அவருக்கு விருப்பமில்லை.

பப்ளிசிட்டிக்கு மறுபெயர்

பப்ளிசிட்டிக்கு மறுபெயர்

இந்த வயதில் அவருக்கு பணம், புகழ் தேவையில்லை. மோடியே நேரில் வந்து பார்க்கிறார் அவரை. எல்லாரும் ரஜினி பேசுவதை பப்ளிசிட்டிக்காக பேசுவதாக கூறுகிறார்கள். பப்ளிசிட்டிக்கு மறுபெயரே ரஜினி தான் என்றார்.

ஆரவாரம்

ஆரவாரம்

லாரன்ஸின் இந்த ஆவேச பேச்சுக்கு அரங்கத்தில் பயங்கர கரகோஷம் இருந்தது. லாரன்ஸ் பேசிய ஒவ்வொரு பேச்சுக்கும் ரஜினி ரசிகர்கள் கைகளை தட்டியும் ஓவேன கத்தியும் ஆரவாரம் செய்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X