ஸ்டெப் பை ஸ்டெப் பழைய பன்னீர்செல்வமாக மாறிய ராகவா லாரன்ஸ்... வெளியானது ருத்ரன் ஃப்ரஸ்ட் சிங்கிள்

சென்னை: சினிமாவில் டான்ஸராக அறிமுகமான ராகவா லாரன்ஸ் தற்போது ஹீரோ, டைரக்டர் என பன்முக கலைஞராக கலக்கி வருகிறார்.

சந்திரமுகி, ஜிகர்தண்டா படங்களின் இரண்டாம் பாகங்களில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ், ருத்ரன் படத்திலும் பிஸியாக உள்ளார்.

கதிரேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

இந்நிலையில், ருத்ரன் படத்தில் இருந்து பாடாத பாட்டெல்லாம் என்ற முதல் பாடல் வெளியாகி இணையத்தை கலங்கடித்து வருகிறது.

 டான்ஸ் டான்

டான்ஸ் டான்

டான்ஸராக சினிமாவில் அறிமுகமான ராகவா லாரன்ஸ் பின்னர் டான்ஸ் மாஸ்டராக கவனம் பெற்றார். கோலிவுட்டின் டாப் ஹீரோக்களை ஆட வைத்த ராகவா லாரன்ஸ், பார்த்தேன் ரசித்தேன், பார்த்தாலே பரவசம் படங்களில் நடித்து நடிகராகவும் மாஸ் காட்டினார். தொடர்ந்து ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கிய அவர், 2004ல் தெலுங்கில் வெளியான மாஸ் படத்தின் மூலம் இயக்குநராகவும் தடம் பதித்தார். பின்னர் முனி, காஞ்சனா படங்களின் மூன்று பாகங்களையும் இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்து பிரமிக்க வைத்தார்.

 5 படங்களில் கமிட்டட்

5 படங்களில் கமிட்டட்

இந்நிலையில், தற்போது 5 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். அதன்படி, அவரது ருத்ரன், சந்திரமுகி 2, ஜிகர்தண்டா 2, துர்கா, அதிகாரம் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதில் ருத்ரன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ருத்ரன் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 1962ல் வெளியான வீரத் திருமகன் படத்தில் இடம்பெற்ற பாடாத பாட்டெல்லாம் என்ற பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை ருத்ரன் படத்திற்காக ரீமிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளது படக்குழு.

 டான்ஸில் அசத்தல்

டான்ஸில் அசத்தல்

ஒரிஜினல் பாடாத பாட்டெல்லாம் பாடலுக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஜோடி இசையமைத்திருந்தது. தற்போது ருத்ரனுக்காக அந்தப் பாடலை தரன்குமார் ரீமிக்ஸ் செய்துள்ளார். ஸ்ரீதர் மாஸ்டர் கோரியோகிராபியில் ராகவா லாரன்ஸும் பிரியா பவானி சங்கரும் நடனமாடியுள்ளனர். பிரம்மாண்டமான செட்டில் ஃபீல் குட்டாக அமைந்துள்ள இந்தப் பாடலில் ராகவா லாரன்ஸின் டான்ஸ் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது. பாடல் முழுவதும் ஸ்லோ மோடில் கோரியோகிராபி செய்யப்பட்டிருந்தாலும் ராகவா லாரன்ஸின் டான்ஸ் வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

சிங்கிள் ஷாட்டில் மிரட்டல்

ராகவா லாரன்ஸின் டான்ஸில் எப்போதுமே லெக் மூவ்மெண்ட்ஸ் அசத்தலாக இருக்கும். அதை டார்க்கெட் செய்தே ஸ்ரீதர் மாஸ்டரும் கோரியோகிராபி செய்துள்ளார். முக்கியமாக இந்தப் பாடலின் 3.27 டைம்மிங்கில் இருந்து 3.50 வரை சிங்கிள் ஷாட்டில் ராகவா லாரன்ஸ் போட்டுள்ள ஸ்டெப் செம்ம க்யூட்டாக அமைந்துள்ளது. அதேபோல், பாடல் முழுவதும் மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக நடனமாடி மிரட்டியுள்ளார் ராகவா லாரன்ஸ். இந்தப் பாடலை பார்த்த ரசிகர்கள் ராகவா லாரன்ஸின் நடனத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X