twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெய்பீம் பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டிதரும் முடிவை மாற்றிய ராகவா லாரன்ஸ்… காரணம் இதுதான் !

    |

    சென்னை : ஜெய்பீம் படத்தின் உண்மையான நாயகியான பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளதற்கு ராகவா லாரன்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெய் பீம்.

    அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான இத்திரைப்படத்தை அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டினர்

    13 ஆண்டுகளுக்கு பின்

    13 ஆண்டுகளுக்கு பின்

    ஜெய்பீம் திரைப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் காட்டப்பட்ட ராசாக்கண்ணு மீது பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது.

    பார்வதி அம்மாளுக்கு வீடு

    பார்வதி அம்மாளுக்கு வீடு

    ஜெய்பீம் படத்தின் உண்மைக்கதைநாயகனான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமைநிலையில் வாழ்ந்து வருவதை செய்தி மூலம் அறிந்த பிறகு, பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தேன். பார்வதி அம்மாவை நேரில் சந்தித்தும் அவரிடம் இதுபற்றி தெரிவித்தேன். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள, கீழ நத்தம் கிராமத்தில் பார்வதி அம்மாளின் மகளுக்கு நிலம் உள்ளது என்றும் அந்த இடத்தில் வீடு கட்டித்தரும்படி கேட்டுக்கொண்டனர்.

    தமிழக அரசு வீடு

    தமிழக அரசு வீடு

    அதன்படி சில நாட்களுக்குமுன் கீழநத்தம் கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்தோம். விரைவில் வீடுகட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியில் இருந்தநிலையில்,பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித்தர இருப்பதாக தொலைக்காட்சி செய்தி மூலம் அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.

    அரசுக்கு நன்றி

    அரசுக்கு நன்றி

    பார்வதி அம்மாவின் இன்றைய வறுமைநிலையை அறிந்து அவருக்கு வாழ்விடத்தை கட்டிக்கொடுக்க முன்வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தலா 2 லட்சம்

    தலா 2 லட்சம்

    பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தருவதற்காக நான் ஒதுக்கிய 5 லட்சத்துடன் மேலும் 3 லட்சம் சேர்த்து, பார்வதி அம்மாள், அவருடைய மகள், மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சங்களை வழங்க முடிவு செய்துள்ளேன்.

    படக்குழுவினருக்கு நன்றி

    படக்குழுவினருக்கு நன்றி

    பார்வதி அம்மாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நல்லது நடப்பதற்கு காரணமாக இருந்த ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை தயாரித்த திரு.சூர்யா, திருமதி.ஜோதிகா, இயக்குநர் திரு. த.செ. ஞானவேல் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியோடு நினைவுகூர்வோம் என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Raghava Lawrence thanked Chief Minister MK Stalin for helping Jai Bhim Parvathy Amma family.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X