எல்லா புகழும் இவர்களுக்கே… ரஜினி, அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை நெகிழவைத்த லாரன்ஸ்!

நடிகர் லாரன்ஸ் அவருக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் அஜித் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி கொடுக்கப்போவதாகவும், மக்களை நேரில் சந்தித்து உதவ கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் கேரளாவுக்கு கொடுப்பதாக செய்திகள் வெளியானதும், அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் லாரன்ஸை பாராட்டு மழையில் நனைத்து விட்டனர்.

Raghava Lawrence thanking list!

நெகிழ்ந்து போன நடிகர் லாரன்ஸ், உச்சிக்கு சென்ற பிறகு ஏற்றிவிட்ட ஏணியை மறப்பவன் மனிதனல்ல என்ற கூற்றுக்கு ஏற்ப, தனக்கு வாய்ப்பளித்து உதவிய திரைப்பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ராகாவா லாரன்ஸ். அவருக்கு சிறுவயதில் மூளைப் புற்று இருந்துள்ளது. அதற்கு மருத்துவம் பார்த்துக்கொண்டே ஸ்ரீராகவேந்திரா சுவாமியிடம் பிரார்த்தனை செய்திருக்கிறார் லாரன்சின் தாயார்.

அதன்பிறகு மூளைப்புற்றுநோய் முழுமையாக குணமடைந்து நலம்பெற்றுள்ளார் லாரன்ஸ். ஸ்ரீராகவேந்திரா சுவாமியின் அருளால்தான் குணமாகியது என அன்றிலிருந்து தீவிர பக்தராகிவிட்டார். ஸ்ரீராகவேந்திரா சுவாமிக்கு கோவில் கட்டியுள்ள லாரன்ஸ், சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

ட்விட்டரின் நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள பட்டியலில் ஸ்ரீராகவேந்திரா சுவாமியில் தொடங்கி, வளர்த்த அம்மாவிலிருந்து சினிமாவில் அவருடைய வளர்ச்சிக்கு காரணமான ரஜினிகாந்த், அஜித், விஜய், பாலச்சந்தர் என அனைவரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X