twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சமூகவிலகலைப் பின்பற்றி உதவுவோம்..கொரோனாவை வெல்வோம்.. தன்னார்வலர்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

    By
    |

    சென்னை: தன்னார்வலர்கள் உதவுவதற்கு எந்த தடையுமில்லை என்று உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Breaking! Raghava Lawrence again proved his humanity | Chandramuki 2

    தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக உணவு, சமையல் பொருட்கள் வழங்க தமிழக அரசு தடை விதித்ததாக நேற்று செய்திகள் வெளியானது.

    இந்நிலையில், அரசின் இந்த தடை உத்தரவு, அதிர்ச்சியாக உள்ளது என்று நடிகர் லாரன்ஸ் கூறியிருந்தார்.

    வேற லெவல் மாறா.. சூர்யாவின் சூப்பர் ஹிட் தள்ளிப் போகுதே.. டிரெண்டாகும் சூரரைப் போற்று மேக்கிங்!வேற லெவல் மாறா.. சூர்யாவின் சூப்பர் ஹிட் தள்ளிப் போகுதே.. டிரெண்டாகும் சூரரைப் போற்று மேக்கிங்!

    அரசுக்கு நன்றி

    அரசுக்கு நன்றி

    அதோடு, தன்னார்வலர்கள் மக்களுக்குப் பொருட்களை வழங்குகிற நடைமுறையில் கெடுபிடியான சட்ட நெறிமுறைகளை வகுத்து, அதை காவல்துறை துணையோடு கடைப்பிடிக்க உத்தரவிடலாம் என்றும் அரசுக்கு அவர் ஆலோசனைக் கூறியிருந்தார். இந்நிலையில் தன்னார்வலர்களுக்கு அரசு தடை விதிக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனால் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார், லாரன்ஸ்.

    தன்னார்வலர்கள்

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா ஊரடங்கில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவுவதில் தன்னார்வலர்களுக்கு எந்த தடையும் இல்லை என தமிழக அரசு தற்போது அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கும் அதைப்பற்றி தெளிவாக, நடைமுறை விளக்கம் தந்த காவல்துறை ஆணையருக்கும் நன்றி.

    இக்கட்டான நிலை

    இக்கட்டான நிலை

    அரசைப் பொறுத்தவரை 'மக்களுக்கு கொரோனா பரவாமலும் தடுக்க வேண்டும், அதேநேரம் மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்ற பெரும் இக்கட்டான நிலை உள்ளது. ஆகவே, தமிழக அரசினால் அறிவுறுத்தி சொல்லப்படும் 'சமூக விலகலை' கண்டிப்பாக பின்பற்றி, தன்னார்வலர்களும், என் ரசிகர்கள் மற்றும் திருநங்கைகைள், அபிமானிகள் உள்பட அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது.

    அரசின் அறிவுரை

    அரசின் அறிவுரை

    நாம் மக்களுடைய பசிப்பிணியையும் போக்க வேண்டும். அதே நேரம் கொரோனா வைரஸ் பரவாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் இயலாத மக்களுக்கு இயன்றவரை உதவிடுங்கள். நானும் தமிழக அரசின் சமூக விலகல் அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து, என்னால் முடிந்தவரை உதவி வருகிறேன். அதைப்போலவே அனைவரும் உதவிடுவோம். கொரோனாவை வென்றிடுவோம். தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Raghava Lawrence thanks to Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X