அந்த வாய்ப்பை அளித்த நடிகர் தல அஜித்.. அசத்தலாக நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ்.. ரசிகர்கள் ஜில்!
சென்னை: பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ், தல அஜித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த ஐந்து மாதங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா அச்சம்
இதனால் மக்கள் வீட்டை விட்டு அதிகம் வெளியே வராமல் இருக்கின்றனர். இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.33 கோடியாக உயர்ந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி
இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. பொதுவாக பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் இந்த விழா, கொரோனா காரணமாக வீடுகளிலேயே எளிமையான முறையில் கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் அறிவுறுத்தலை அடுத்து, பொதுமக்கள் நேற்று வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர்.

சமந்தா, பிரசன்னா
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்த சினிமா பிரபலங்களும், தங்கள் வீடுகளில் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிரஞ்சீவி, சமந்தா, பிரசன்னா, நானி உள்பட பல திரை பிரபலங்கள் தாங்கள் வழிபடும் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

நடிகர் அஜித்துக்கு நன்றி
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸும் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற, மகா கணபதி என்ற பாடலுக்கு ஆடி இருந்தார். இந்த பாடலின் மூலம் தனது கேரியரை ஆரம்பித்த லாரன்ஸ், பாடலின் கிளிப்பை பதிவை செய்து, இந்த வாய்ப்பை அளித்ததற்காக, நடிகர் அஜித் மற்றும் படத்தின் இயக்குனர் சரண் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அந்த பாடலை மறக்க முடியாது என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











