twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த கனவு நனவாகணும்..லாரன்ஸ் வைத்த அந்த கோரிக்கை.. உடனே ஏற்றுக்கொண்ட விஜய், உறுதி அளித்த அனிருத்!

    By
    |

    சென்னை: தான் வைத்த கோரிக்கையை நடிகர் விஜய் உடனடியாக ஏற்றுக்கொண்டதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Thalapathy Vijay Surprise call to Raghava Lawrence | Physically Challenged

    நடிகர் ராகவா லாரன்ஸ், கொரோனா நிவாரணத்துக்காக அதிக நிதி உதவி செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தாய் என்ற அமைப்பை ஏற்படுத்தி உதவி வருகிறார்.

    இதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களிடம் உதவி கேட்டிருந்தார். அவர்களும் கொடுத்தனர்.

    திருட்டுத்தனமாக கே.ஜி.எப் படத்தை வெளியிடுவதா? அந்த சேனல் மீது வழக்கு தொடர தயாரிப்பாளர் முடிவுதிருட்டுத்தனமாக கே.ஜி.எப் படத்தை வெளியிடுவதா? அந்த சேனல் மீது வழக்கு தொடர தயாரிப்பாளர் முடிவு

    வாத்தி கம்மிங்

    வாத்தி கம்மிங்

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலின் இசையை, கீபோர்டில் வாசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. ரசிகர்கள் அதை நெகிழ்ச்சியுடன் ஷேர் செய்திருந்தனர். இதைக் கண்ட இசை அமைப்பாளர் அனிருத் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    மாற்றுத்திறனாளி

    மாற்றுத்திறனாளி

    இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக, நடிகர் விஜய்க்கும் அனிருத்துக்கும் டேக் செய்து, நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், இந்த இளைஞர் தான்சேன். தனது மாற்றுத்திறனாளி குழுவில் இருப்பவர். காஞ்சனா படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.

    நனவாக வேண்டும்

    நனவாக வேண்டும்

    இந்த லாக்டவுனில் பயிற்சி செய்து 'மாஸ்டர்' பாடலை வாசித்திருக்கிறார். இவரது கனவு, அனிருத் இசையில் ஒரு சிறு பகுதியை வாசிக்க வேண்டும் என்பதும், விஜய்யின் முன்னிலையில் இசைக்க வேண்டும் என்பதுதான். இவரது கனவு நனவாக வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று கூறியிருந்தார்.

    நல்ல செய்தி

    நல்ல செய்தி

    இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், விஜய் மற்றும் அனிருத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர், என் அம்மாவுக்காக நான் கோயில் கட்டி 4 வருடமாகிவிட்டது. உலகில் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் அந்த கோயிலை சமர்ப்பிக்கிறேன். இந்த அன்னையர் தினத்தில் நல்ல செய்தி நடந்திருக்கிறது.

    லாக்டவுன் முடிந்ததும்

    லாக்டவுன் முடிந்ததும்

    தான்சேன் குறித்து பதிவிட்டு அனிருத் மற்றும் நண்பன் விஜய்க்கும் நான் வேண்டுகோள் வைத்ததை அடுத்து நேற்றிரவு, நண்பன் விஜய்யிடம் பேசினேன். லாக்டவுன் முடிந்ததும் அந்த இளைஞரை அழைத்து வந்து வாசித்துக் காட்ட சொன்னார். அனிருத்தும் வாய்ப்புக் கொடுப்பதாகக் கூறியுள்ளார். அந்த இளைஞரின் கனவு நனவாக காரணமாக இருக்கும் நண்பன் விஜய்க்கும் அனிருத்துக்கும் பெரிய நன்றி. சேவைதான் கடவுள்' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Raghava Lawrance thanks to Actor Vijay and Aniruth for accepting his requst
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X