கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் வில்லன் யார் தெரியுமா ?
சென்னை : மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்பொழுது கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் பணிகளில் உள்ளார்.
ஏற்கனவே நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் டைட்டில் இந்த படத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்க சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக பிரபுதேவா நடிக்கிறார் எனச் சொல்லப்பட்ட நிலையில் இப்பொழுது பிரபல நடிகர் ஒருவரை நடிக்க வைக்க தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

பிளாக்பஸ்டர் வெற்றி
இயக்கியது மூன்றே திரைப்படங்கள் என்றாலும் இப்பொழுது இந்திய அளவில் அனைவராலும் உற்று நோக்கக் கூடிய மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ்க்கு தமிழ் ரசிகர்களிடையே பெரும் ஆதரவு இருந்து வருகிறது. இவரது தனித்துவமான இயக்கத்தின் மூலம் ஒவ்வொரு படத்திலும் அனைவரையும் இம்ப்ரஸ் செய்து வர இயக்கிய மூன்று திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது.

கெத்து காட்டியதோடு
கைதி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் கொரானா சூழல் காரணமாக நீண்ட நாட்களாக வெளியாகாமல் கடந்த பொங்கலுக்கு திரையில் வெளியாகி உலக அளவில் வசூல் சாதனைகளை செய்து கெத்து காட்டியதோடு 2021 இல் வெளியான பிக்ஜஸ்ட் பிளாக்பஸ்டர் படமாக உள்ளது.

இந்தியில் ரீமேக்
மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோவுக்கு இணையான வில்லனாக அமைக்கப்பட்டிருந்த பவானி கதாபாத்திரத்தை பாராட்டாத ஆட்களே இல்லை என சொல்லும் அளவிற்கு அனைவரது பாராட்டுகளையும் பெற்ற விஜய் சேதுபதியின் நடிப்பைத் தொடர்ந்து இப்போது பாலிவுட்டில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வர மாஸ்டர் படம் இந்தியில் ரீமேக் செய்யப் படுவதாக சில பேச்சுகள் அடிபட்டு வருகிறது.

விக்ரம்
இவ்வாறு ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தனது கலையுலக குருவான கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற அந்த படத்திற்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற பெயரில் படம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படத்தில் இருந்து மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி அனைவரையும் மிரட்டி இருக்க அதில் ஆரம்பமே கமல்ஹாசனை வெறித்தனமாக காட்டியிருந்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் வில்லனாக பிரபுதேவா நடிக்க இருப்பதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி இருந்தது.ஆனால் இப்பொழுது நடிகரும் இயக்குனரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தியும் தீயாய் பரவி வருகிறது.

ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்கிறார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. என்றாலும் கமல்ஹாசன் இப்பொழுது தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருப்பதால் இப்போதைக்கு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் உள்ளது விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு வில்லன் உட்பட இதர நடிகர் நடிகைகளின் பெயர்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











