நண்பன் விஜய் கட்டிய சாய் பாபா கோயில்.. ஷோபா அம்மாவுடன் வந்து தரிசித்த ராகவா லாரன்ஸ்.. செம வீடியோ!

சென்னை: பாடி அருகே உள்ள கொரட்டூரில் தனது தாய்க்காக தளபதி விஜய் கட்டி உள்ள சாய்பாபா கோயிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வந்து சாமி தரிசனம் செய்த வீடியோவை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகருடன் சாய்பாபா கோவிலுக்கு வந்த ராகவா லாரன்ஸ் கோயிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Raghava Lawrence visits Vijay s Sai Baba Temple with Thalapathy s mom Shoba Chandrasekhar

சமீபத்தில் நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவுக்காக சாய்பாபா கோயில் ஒன்றை கட்டிக் கொடுத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சாய்பாபா கோயில்: ஜோசப் விஜய் என அழைக்கப்பட்டாலும் மதங்களை கடந்த மனிதனாகவே நடிகர் விஜய் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். அப்பா சந்திரசேகர் கிறிஸ்துவராகவும் அம்மா ஷோபா இந்துவாகவும் உள்ள நிலையில், இரு மத கடவுள்களையும் நடிகர் விஜய் வழிபட்டு வருகிறார். எம்மதமும் சம்மதம் என்கிற கொள்கையுடன் நடித்து வரும் விஜய் தனது அம்மாவின் ஆசைக்காக கொரட்டூரில் சாய் பாபா கோயில் ஒன்றை புதிதாக கட்டியுள்ளார்.

குவியும் ரசிகர்கள்: பக்தர்கள் தாண்டி விஜய் ரசிகர்கள் பலரும் நடிகர் விஜய் கட்டிய அந்தக் கோயிலை பார்த்து விட வேண்டும் என்கிற ஆவலுடன் சாய்பாபா கோவிலுக்கு படையெடுத்து வருகின்றனர். நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தொடர்ந்து அந்த கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்.

தினமும் அன்னதானம்: ஒவ்வொரு கால பூஜை முடியும் போதும் சாய் பாபா கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருவதாகவும் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவதால் பக்தர்கள் ரொம்பவே மகிழ்ச்சி அடைந்துள்ளதாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். நடிகர் விஜய் கட்டிய சாய் பாபா கோயிலை காட்டுகிறேன் என பல யூடியூப் சேனல்களும் அந்த கோயில் முன் குவிந்து வருவது தனி கதை.

ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம்:
நடிகர் ராகவா லாரன்ஸ் சாய்பாபா மற்றும் ராகவேந்திரா சாமிகளை தீவிரமாக வழிபட்டு வருகிறார். ராகவேந்திரா கோயிலை லாரன்ஸ் கட்டிய நிலையில், நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் வந்து பஜனை பாடல் பாடி சென்றனர். அவருடன் வந்து நண்பன் விஜய் கட்டிய கோயிலை பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என ராகவா லாரன்ஸ் சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்த வீடியோவை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நண்பன் விஜய்: திருமலை படத்தில் விஜய் மற்றும் ராகவா லாரன்ஸ் “தாம்தக்க தையத்தக்க கூத்து” பாடலுக்கு ஒன்றாக இணைந்து நடனமாடி இருப்பார்கள். அப்போதிலிருந்து இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வரும் நிலையில் தற்போது நண்பன் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு வந்து பார்த்து சாமி கும்பிட்டது மகிழ்ச்சியை தருவதாக ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ளார்.

தமிழ் புத்தாண்டு ட்ரீட்: கோட் படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 5 என சமீபத்தில் விஜய் அறிவித்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு நாளை கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடிய பாடல் ஃபர்ஸ்ட் சிங்கிளாக நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X