சூரி, சூர்யாவுக்கு மட்டுமல்ல.. அடுத்ததாக ராகவா லாரன்ஸுக்கும் கதை ரெடி பண்ணும் வெற்றிமாறன்?

சென்னை: தனுஷை தாண்டி வெளியே வர மாட்டாரா இயக்குநர் வெற்றிமாறன் என ஏங்கிய ரசிகர்களுக்கு அடுத்த இன்பதிர்ச்சியாக ராகவா லாரன்ஸ் உடன் அவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் படம் உருவானாலே தேசிய விருதை பார்சல் பண்ணுங்கப்பா என்கிற ரேஞ்சில் தான் படம் இருக்கும்.

தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களின் பெரிய நாற்காலியை போட்டு கெத்தாக அமர்ந்திருப்பவர் வெற்றிமாறன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

வெற்றிமாறன் தனுஷ் காம்போ

வெற்றிமாறன் தனுஷ் காம்போ

பொல்லாதவன் தொடங்கி ஆடுகளம், வடசென்னை, அசுரன் வரை இவர்களது கூட்டணி தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாகவே அமைந்துள்ளது. நடிகர் தனுஷுக்கு இந்தியளவில் பேரையும் புகழையும் பெற்றுத் தந்த படங்களாக வெற்றிமாறன் படங்கள் காலரை தூக்கி விட்டு மாஸ் காட்டுகின்றன.

அட்டகத்தி தினேஷ் நடிப்பில்

அட்டகத்தி தினேஷ் நடிப்பில்

நடிகர் தனுஷை தாண்டி இயக்குநர் வெற்றிமாறன் வெளியே வர மாட்டாரா என விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், நடிகர் அட்டகத்தி தினேஷ் மற்றும் சமுத்திரகனியை வைத்து விசாரணை எனும் தரமான படத்தை இயக்கி தேசிய விருதை தட்டிச் சென்றார் இயக்குநர் வெற்றிமாறன்.

சூரியை ஹீரோவாக்கி

சூரியை ஹீரோவாக்கி

அசுரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மீண்டும் தனுஷை தவிர்த்து நடிகர் சூரியை ஹீரோவாக்கி விஜய்சேதுபதிக்கு முக்கிய ரோல் கொடுத்து விசாரணையை போலவே விடுதலை படத்தையும் வித்தியாசமாக இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

வாடிவாசல்

வாடிவாசல்

நடிகர் சூரியை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தையும் இயக்குநர் வெற்றிமாறன் உருவாக்க திட்டமிட்டுள்ளார். விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் இன்னொரு பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

DHANUSH AWARDல எனக்கும் SHARE இருக்குனு சொன்னார் | ASURAN NATIONAL AWARD | FILMIBEAT TAMIL
ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

அது வேறு யாருமில்லை நம்ம ராகவா லாரன்ஸ் மாஸ்டரை தான் இயக்கப் போகிறாராம் இயக்குநர் வெற்றிமாறன். அவருக்காக புதிதாக கதை ஒன்றை வெற்றிமாறன் எழுதி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடிய விரைவிலேயே இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக படங்கள்

அதிக படங்கள்

சில ஆண்டுகளுக்கு புதிதாக கால்ஷீட்டே கொடுக்க முடியாத அளவுக்கு நடிகர் தனுஷ் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என செம பிசியாக இருப்பதால் மீண்டும் இயக்குநர் வெற்றிமாறன் உடன் இணைந்து படம் பண்ண நீண்ட காலம் ஆகும் என தெரிகிறது. தனுஷுக்காக காத்திருக்காமல் புதிய புதிய நடிகர்களை வைத்து படமெடுக்க ஆயத்தமாகி விட்டார் வெற்றிமாறன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X