வெளியானது சந்திரமுகி 2 படத்தின் சென்சார் தகவல்.. ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பி.வாசு இயக்கத்தில், 2005ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வசூலை அள்ளிய இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் செப்டம்பர் 28ந் தேதி வெளியாக உள்ளது.

Raghava lawrences chandramukhi 2 censored UA certificate running time

சந்திரமுகி 2: சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினிகாந்த் வேட்டையன் ராஜாவாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடித்துள்ளார். இந்த படத்தில் லாரன்ஸ் கமிட் ஆன போதே ரஜினியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.

தள்ளிவைப்பு: சந்திரமுகி 2 படத்தின் வேலைகள் ஓராண்டிற்கும் மேலாக நடைப்பெற்று வந்தது. படத்தில் சிஜி எஃபெக்ட்ஸ் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அப்போது படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் சிஜி எஃபெக்ட்ஸ் பணிகள் முடிவடையாததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு செப்டம்பர் 28ந் தேதி படம் வெளியாக உள்ளது.

தனித்தனி கதை: வேட்டையன் ராஜாவால் உயிரிழந்த சந்திரமுகிக்கு தனி கதை, வேட்டையன் ராஜாவிற்கும் தனி கதை உள்ளது. இவர்கள் இருவரின் முன் ஜென்மத்தை சந்திரமுகி 2 படத்தில் காண்பிக்க உள்ளனர். அதனால் படத்தின் பழிவாங்கும் அம்சங்கள், ஹாரர் அம்சங்கள் என பல இடம் பெற உள்ளன

சென்சர், ரன்னிங் டைம்: இந்நிலையில், சந்திரமுகி 2 படத்திற்கு தணிக்கைக்குழு யூஏ சான்றிதழும், படத்தின் ரன்னிங் டைம் 2.37 மணி நேரம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லக்ஷமி மேனன், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X