சன் டிவியில் சந்திரமுகி 2.. இதையாவது பேரிடரா அறிவியுங்க நிம்மி மேடம்.. பறக்கும் மீம்ஸ்!

சென்னை: பி. வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்த சந்திரமுகி திரைப்படம் 2005ம் ஆண்டு வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. சுமார் 3 ஆண்டுகள் ஓடி சாதனையும் படைத்தது. அதே பி. வாசு இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் 3 நாள் கூட முழுசா ஓடாமல் தோல்வியை தழுவியது.

பாலிவுட்டில் கங்கனா நடித்து வரும் படங்களே படுதோல்வியை சந்தித்து வரும் நிலையில், அவரை வைத்து சந்திரமுகி 2 படத்தை பி. வாசு இயக்கிய நிலையில், அந்த தோல்வி இங்கேயும் தொடர்கிறது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். சன் டிவியில் புத்தாண்டை முன்னிட்டு ஒளிபரப்பாகவுள்ள சந்திரமுகி 2 படம் குறித்து ஏகப்பட்ட மீம்கள் தற்போது டிரெண்டாகி வருகின்றன.

Raghava Lawrences Chandramukhi 2 gets trolled for its Sun Tv premiere too

சறுக்கிய சந்திரமுகி 2: பார்ட் 2 எடுக்கிறேன் என சாமி படத்தை சாமி ஸ்கொயர் என எடுத்து ஹரி சொதப்பியதை போல சந்திரமுகி படத்தை 2ம் பாகம் எடுக்கிறேன் என பி. வாசு சறுக்கி விட்டார். காஸ்டிங் தேர்விலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு போய் விட்டது. ரஜினிக்கு பதில் ராகவா லாரன்ஸ், ஜோதிகாவுக்கு பதில் லட்சுமி மேனன், நயன்தாராவுக்கு பதில் மஹிமா நம்பியார் என நடிகர்கள் தேர்வே நல்லா இல்லையே என கலாய்த்து வந்த ரசிகர்கள் படமாவது நல்லா இருக்கும் என நம்பிப் போய் பார்த்தால் தலைவலியுடன் கங்கனா ரனாவத்தின் மோசமான மேக்கப்பையும் அந்த 4 நாய்களுடன் சண்டை போடும் சொதப்பலான சிஜியை பார்த்து சிரித்தது தான் மிச்சம்.

சன் டிவியில் ஒளிபரப்பு: 2024ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு சந்திரமுகி 2 படத்தை சன் டிவி ஒளிபரப்ப உள்ளது. அதன் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் வேறலெவலில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தேசிய பேரிடர்: சென்னை வெள்ளம் மற்றும் தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தை எல்லாம் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என நிர்மலா சீதாராமன் சொன்ன நிலையில், சன் டிவியில் புத்தாண்டு என்றும் பாராமல் இப்படி எங்களை வச்சு செய்யப் போறாங்க, இதையாவது தேசிய பேரிடராக அறிவியுங்க நிம்மி மேடம் என மீம் போட்டு நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் மிரட்டல்: பி. வாசு இயக்கத்தில் நடித்த ராகவா லாரன்ஸ் குழந்தைகளை காப்பாற்ற பைக்கை எடுத்துக் கொண்டு பஸ்ஸுக்குள் உடைத்துக் கொண்டு சென்று வெளியே குழந்தைகளுக்கு ஒரு கீறல் கூட வராமல் வெளியே வருவதை பார்த்தும், அவர் லிப்ஸ்டிக் போட்டு செங்கோட்டையனாகவும் பின்னர் வேட்டையனாகவும் மாறியதை எல்லாம் பார்த்து கிரிஞ்ச் என சொன்ன அதே ரசிகர்கள் தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் கருப்பு மேக்கப் போட்டுக் கொண்டு ஆலியஸ் சீசராக நடித்த ராகவா லாரன்ஸை பாராட்டினர். இயக்குநர்களிடம் தான் நடிகர்களை நல்ல நடிகராகவும் மோசமான காமெடியனாகவும் காட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X