வேட்டையன் ராஜா பராக்..பராக்..சந்திரமுகி 2 ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

பி.வாசு இயக்கத்தில், 2005ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர்.

மிகப்பெரிய வசூலை அள்ளிய இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் செப்டம்பர் 28ந் தேதி வெளியாக உள்ளது.

raghava lawrences Chandramukhi 2 is set to premiere on Netflix starting October 26th

ராகவா லாரன்ஸ்: சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினிகாந்த் வேட்டையன் ராஜாவாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடித்துள்ளார். இந்த படத்தில் லாரன்ஸ் கமிட் ஆன போதே ரஜினியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.

கதையில் மாற்றம்: சந்திரமுகி 2 படத்தில், வேட்டையபுரம் அரண்மனை, அதே சந்திரமுகி, அதே வேட்டையன் ராஜா இந்த பாகத்திலும் முக்கிய பங்காற்றி உள்ளது. முதல் பாகம் சைக்காலஜி த்ரில்லர் பாணியில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் பாகத்தில், ஆத்மா, பேய், தெய்வசக்தி, பேய்க்கும் பேய்க்கும் சண்டை என கதையை மாற்றி அமைத்திருந்தார்.

நெகட்டிவ் விமர்சனம் ட்ரோல்: சந்திரமுகி 2 என படத்திற்கு பெயர் வைத்து விட்டு, சந்திரமுகி படத்தில் வந்த காட்சியை அப்படியே வேறு நடிகர்களை வைத்து எடுத்து இருக்கிறார் இயக்குநர் என ரசிகர்கள் படத்தை கடுமையாக ட்ரோல் செய்தனர். படம் வெளியான முதல் நாள் 7.5 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.4.50 கோடி வசூலித்தது. படத்திற்கு வந்த நெகடிவ் விமர்சனங்களால் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

raghava lawrences Chandramukhi 2 is set to premiere on Netflix starting October 26th

ஓடிடி ரிலீஸ்: இந்நிலையில் சந்திரமுகி 2 திரைப்படம் அக்டோபர் 26ந் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இப்படத்தை தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், இந்தி என பல தென்னிந்திய மொழிகளில் காண முடியும் என படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X