Chandramukhi 2: வேட்டைய ராஜா பராக் பராக்.. நாளை வெளியாகும் சந்திரமுகி 2 வேட்டையன் லுக்!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் சந்திரமுகி 2.

இந்தப் படத்தின் முதல் பாகத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு என முன்னணி நடிகர்கள் நடித்து பட்டையை கிளப்பியிருந்தனர்.

படத்தில் வேட்டையன் என்ற கேரக்டரில் ரஜினி ராஜா கெட்டப்பில் நடித்திருந்தார். இந்த கேரக்டர் சந்திரமுகி படத்தில் முக்கியமாக அமைந்தது.

நாளை வெளியாகும் சந்திரமுகி 2 வேட்டையன் லுக்: நடிகர்கள் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு முன்னணி கேரக்டர்களில் நடித்து கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது சந்திரமுகி படம். மலையாளத்தில் இருந்து டப் செய்யப்பட்டிருந்தாலும் இந்தப் படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப சிறப்பாக கொடுத்திருந்தார் இயக்குநர் பி வாசு. படத்தில் ரஜினியின் ஸ்டைல், நயன்தாராவின் அழகு, ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பு, பிரபுவின் அமைதி, வடிவேலு -ரஜினி காம்பினேஷன் காமெடி காட்சிகள் ரசிகர்களை கட்டிப் போட்டன.

தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் பி வாசுவே இயக்கி முடித்துள்ளார். ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தில் ஹீரோவாக இணைந்துள்ளார். மேலும் கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு என படத்தின் கூட்டணி சிறப்பாக அமைந்துள்ளது. சமீபத்தில் வடிவேலு டப்பிங் முடித்த வீடியோவையும் தயாரிப்பு நிறுவனமான லைகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் நாளை காலை படத்தில் ராகவா லாரன்சின் வேட்டையன் லுக்கை வெளியிட உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலத்திலக, வேட்டைய ராஜா பராக் பராக் பராக் என்று என்று போஸ்டருடன் நாளை காலை 10 மணிக்கு படத்தில் ராகவா லாரன்சின் வேட்டையன் லுக் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது.

Raghava lawrences Vettaiyan Look in Chandramukhi 2 movie will be released tomorrow

லைகா நிறுவனத் தயாரிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்திற்கு ஆஸ்கர் வின்னர் கீரவாணி இசையமைத்துள்ளார். படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளியாகவுள்ள நிலையில், ரஜினியின் சிறப்பான லுக், ஸ்டைல், நடிப்பு, காமெடியை எதிர்பார்த்து ரசிகர்கள் இந்தப் படத்தை அணுகும் நிலை உள்ளது. அவரது கேரக்டரில் தன்னை எப்படி சிறப்பாக ராகவா லாரன்ஸ் கொடுத்திருப்பார் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நாளை வெளியாகும் வேட்டையன் லுக், அதன் முன்னோட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

முதல் பாகத்தில் அனைத்து அம்சங்களும் கமர்ஷியல் நோக்கத்துடன் சிறப்பாக இருந்தாலும் பிளாஷ்பேக்காக வரும் வேட்டையன் -சந்திரமுகி சம்மந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அதில் வேட்டையனாக நடிகர் ரஜினி சிறப்பாக பொருந்தியிருந்தார். லக லக லக வென அவர் விடாமல் சொல்வது சந்திரமுகியை மட்டுமில்லாமல் பார்க்கும் ரசிகர்களையும் எரிச்சலுக்குள்ளாக்கியது. அந்த வகையில் ராகவா லாரன்ஸ் வேட்டையன் லுக் எப்படி இருக்கும் என்பதை பார்க்க நாளை வரை காத்திருக்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X