லோகேஷ் யுனிவர்ஸ் மாதிரி இப்ப கெளதம் யுனிவர்ஸ்: இங்கேயும் கமல் தான் வேட்டையாடி விளையாடப் போறாராம்!

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்திருந்த 'வேட்டையாடு விளையாடு' திரைப்படம் 2006ம் ஆண்டு வெளியானது.

Recommended Video

Blue சட்டை அணிந்து வந்து Blue Sattai Maran-னை வெளுத்து வாங்கிய Perarasu

கமல் ராகவன் ஐபிஎஸ் கேரக்டரில் நடித்திருந்த இப்படம், மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

இந்நிலையில், லோகேஷ் கனராஜ்ஜின் யுனிவர்ஸ் மாதிரி, கெளதமும் ஒரு யுனிவர்ஸ் கட்டமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மிரட்டிய ராகவன் ஐபிஎஸ்

மிரட்டிய ராகவன் ஐபிஎஸ்

மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கெளதம் மேனன், காதல் படங்களை மட்டுமே இயக்கி வந்தார். அவரது படங்களில் ஆக்சன் காட்சிகள் இருந்தாலும், முழுமையான ஆக்சன் படமாக அவர் இயக்கியது 'வேட்டையாடு விளையாடு' தான். முதன்முறையாக கமலுடன் அவர் கூட்டணி வைத்த இப்படம், சூப்பர் ஹிட் ஆனது. ராகவன் ஐபிஎஸ் என்ற கேரக்டரில் கமல் மிரட்டியிருப்பார்.

கமல் ஜோதிகா கூட்டணி

கமல் ஜோதிகா கூட்டணி

தெனாலி படத்திற்குப் பின்னர் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் தான் கமலும் ஜோதிகாவும் இணைந்து நடித்திருந்தனர். இன்னொரு நாயகியாக கமாலினி முகர்ஜி ஸ்கோர் செய்திருப்பார். இரண்டு சைக்கோ கொலைகாரர்களை தேடும் கமலின் ராகவன் ஐபிஎஸ் கேரக்டர், ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. நீண்ட வருடங்களுக்குப் பின்னர் கமலும் போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் செம்ம ஸ்டைலாக மாஸ் காட்டிருப்பார்.

மேக்கிங்கில் அசத்திய கெளதம்

மேக்கிங்கில் அசத்திய கெளதம்

கமலின் இன்ட்ரோ சீன் முதல், ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருப்பார் கெளதம். "என் கண்ணு வேணும்ன்னு கேட்டியாமே" என்ற இந்த சீன், தரமான ஃபேன் பாய் சம்பவமாக அமர்க்களப்படுத்தியது. அதேபோல், ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு கெத்து காட்டியது. இந்தப் படம் கமல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

வேட்டையாடு விளையாடு 2ம் பாகம்

வேட்டையாடு விளையாடு 2ம் பாகம்

கமல் நடிப்பில் சமீபத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த 'விக்ரம்' படத்தை லோகேஷ் இயக்கியிருந்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஹாலிவுட் படங்களைப் போன்று லோகேஷும் தனக்கென யுனிவர்ஸ் அமைப்பதாகக் கூறியிருந்தார். இது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்போது அதேபோல், இயக்குநர் கெளதம் மேனனும் தனக்கான யுனிவர்ஸை ஆரம்பிக்க உள்ளதாகவும், அதன் தொடக்கமாக கமல் நடிப்பில் 'வேட்டையாடு விளையாடு' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த அப்டேட் ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X