பராமரிப்புப் பணியில் ரஜினியின் ராகவேந்திரா மண்டபம்? லதா மேடம் அப்படி சொல்லலியே.. பிஆர்ஓ விளக்கம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக லதா ரஜினிகாந்த் கூறியதாக உலாவும் தகவல் குறித்து அவரது பிஆர்ஓ விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

ராகவேந்திரா மண்டபத்தை தர முடியாது? Latha Rajinikanth சொன்னாரா? இல்லையா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஒரு வாரத்தில் எதிர்பாராத அளவுக்கு பரவியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

குறிப்பாக சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 5 நாட்களில் பல மடங்கு உயர்ந்து விட்டது. இதனால் கீழ்பாக்கம் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் நிரம்பிவிட்டன.

திருமண மண்டபங்கள்

திருமண மண்டபங்கள்

இதனை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்கள் மற்றும் கல்லூரிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பலரும் தங்களின் திருமண மண்டபங்களை அரசு மருத்துவமனையாக பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்து வருகின்றனர்.

பராமரிப்பு பணி?

பராமரிப்பு பணி?

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 3 மாதங்களுக்கு எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது என லதா ரஜினிகாந்த் கூறியதாக தகவல் வெளியானது.

ரஜினிகாந்த் பிஆர்ஓ

ரஜினிகாந்த் பிஆர்ஓ

இந்நிலையில் ராகவேந்திரா திருமண மண்டபம் மெயின்டனஸில் இருப்பதாக லதா ரஜினிகாந்த் கூறியதாக வெளியான தகவல் பொய்யானது என்றும் அப்படி எதுவும் லதா ரஜினிகாந்தால் சொல்லப்படவில்லை என்றும் அவரது பிஆர்ஓ ரியாஸ் அகமது தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

தேவை ஏற்படும் போது

தேவை ஏற்படும் போது

கடந்த சில நாட்களுக்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் தனது மண்டபத்தை மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கடிதம் எழுதினார். அதனை தொடர்ந்து மண்டபத்தை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், தேவை ஏற்படும் போது பயன்படுத்திக் கொள்வதாக கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X