Keerthy Suresh: மாட்டிக் கொண்ட கீர்த்தி சுரேஷ்.. ஓங்கி ஓங்கி அடிக்கும் குட்டி ராட்சசி.. செம க்யூட் வீடியோ!
கொச்சி: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகை. இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும் மலையாளத்தை விடவும், தமிழ் மற்றும் தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் கவனிக்கத்தகுந்த படங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரகு தாத்தா. இந்தப் படத்திற்கு தியேட்டரில் சுமாரான வரவேற்பு கிடைத்தாலும், ஓடிடி தளத்தில் 150 மில்லியன் நிமிடங்களுக்கு மேல் ஸ்ட்ரீம் ஆன படமாக சாதனை படைத்துள்ளது. தற்போது கீர்த்தி சுரேஷ் இந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கீர்த்தி சுரேஷைப் பொறுத்தவரையில் அவர் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் படம் இவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது. மேலும், இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இவரை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தது. இந்தப் படத்திற்குப் பின்னர் தமிழில் மோஸ்ட் வாண்டட் கதாநாயகியாக மாறினார். ஹோம்லியான நடிப்பு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகை, தமிழும் தெளிவாகப் பேசுவார் என்பதால், பெரும்பாலான தயாரிப்பாளர்களின் சாய்ஸாக கீர்த்தி சுரேஷ் இருந்தார். இதனால் விஜய்யுடன் பைரவா, சர்கார், விக்ரமுடன் சாமி 2, தனுஷுடன் தொடரி, ரஜினியுடன் அண்ணாத்த என பல படங்களில் நடித்து அதகளப் படுத்தினார். தமிழில் மட்டும் இவரது கிராஃப் உயரவில்லை. தெலுங்கிலும் டாப் கதாநாயகியாக உருவெடுத்தார்.

நடிகையர் திலகம்: கீர்த்தி சுரேஷ் குறித்து கொஞ்சம் சலசலப்பு திரையுலகில் ஏற்பட்டாலும் தனது அசாத்திய நடிப்பினால் இன்னும் முன்னணி கதாநாயகிகள் வரிசையில் உள்ளார். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (தெலுங்கு) தமிழில் நடிகையர் திலகம் படத்தில் நடித்தார். படத்தை பார்த்த அனைவருமே அசந்து போனார்கள் என்றுதான் கூறவேண்டும். படம் பார்த்த அனைவருமே, இந்தப் படத்திற்கு குறிப்பாக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கட்டாயம் கிடைக்கும் என வாழ்த்த ஆரம்பித்துவிட்டார்கள். அதேபோல் தேசிய விருதும் அவரைத் தேடி வந்தது.
ரகு தாத்தா: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக கடந்த ஆகஸ்ட் 15 அன்று ரகுதாத்தா படம் வெளியானது. இந்தப் படத்திற்கு தியேட்டரில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதற்கு காரணம், அப்போது வெளியான பெரிய ஹீரோக்களின் படங்களும் ஒரு காரணம்தான். ஆனால் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி இதுவரை 150 மில்லியன் நிமிடங்களுக்கு மேல் ஸ்ட்ரீம் ஆகியுள்ளது. உண்மையைச் சொல்லப்போனால் ஓடிடி தளத்தில் ரகு தாத்தா படம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரிவால்வர் ரீட்டா படம் வெளியாகவிருக்கிறது. அதேபோல் ஹிந்தியில் பேபி ஜான் படமும் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது என கூறப்படுகின்றது. பேபி ஜான் திரைப்படம் தெறி படத்தின் ரீமேக் என்பதும்; அதனை அட்லீ தயாரிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

வீடியோ: இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவரது தலையில் அவருக்கு நெருக்கமான உறவினரின் குழந்தை அமர்ந்துள்ளது. அந்தக் குழந்தை அவரை ஓங்கி ஓங்கி அடிக்கின்றது. மேலும் கண்களைக் குத்துகின்றது. கீர்த்தி சுரேஷ் அந்தக் குழந்தையிடம் முத்தம் கேட்கின்றார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் கீர்த்தி சுரேஷ் ஒரு குட்டி ராட்சசியிடம் மாட்டிக் கொண்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











