Raghuvaran Son - அடேங்கப்பா ரகுவரன் பையனா இது.. அப்படியே இருக்காரே.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: Raghuvaran's son (ரகுவரனின் மகன்) தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் ரகுவரன். அவரது உடலில் இருந்த ஒவ்வொரு பாகமும் நடிக்கும் என்ற பேச்சுதான் அவர் உயிரோடு இருக்கும்வரை இருந்தது. இந்த சூழலில் அவரது மகனின் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.

கோலிவுட் எத்தனையோ நடிகர்களை கண்டிருக்கிறது. ஆனால் ரகுவரன் போல் இதுவரை யாரையும் கோலிவுட்டால் கண்டெடுக்க முடியவில்லை. ஏனெனில் ரகுவரன் நடிப்பில் பல வேரியஷன்களை காண்பிக்கக்கூடியவர். அப்படி அவர் பல வேரியஷன்களை காட்டி நடித்த படங்கள் ஏராளம். அதனாலேயே அவருக்கு நிகரான நடிகர் இன்றுவரை யாரும் இல்லை என்ற பேச்சுதான் இருக்கிறது.

Raghuvarans son Rishis video has been released and is trending on the internet

ஏழாவது மனிதன்: ரகுவரன் சினிமா கல்லூரியில் இணைந்து படித்தார். அங்கு சினிமா தொடர்பான விஷயங்களையும், நடிப்பையும் கற்றுக்கொண்ட அவர் தொடர்ந்து வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார். முயற்சியின் பலனாக ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அந்தப் படமும் தேசிய விருது வென்றது.

வில்லன் ரகுவரன்: கோலிவுட்டில் ஒரு விதி இருந்தது. அதாவது வில்லன் என்றால் ஆஜானுபாகுவாக, மற்றவர்களை உருவத்தை வைத்தே பயப்பட வைக்க வேண்டும் என்பதுதான் அது. ஆனால் ரகுவரனோ அதற்கு நேர்மாறானவர். ஒல்லியான தேகம், குழி விழுந்த கன்னம், அளவுக்கு அதிகமான உயரம் என வில்லனுக்கு அதுவரை கோலிவுட் எழுதியிருந்த ஃபார்முலாவை மீறி இருந்தார். தனது உடல் மொழி, வாய்ஸ், பார்வை என அனைத்தையும் வைத்து வில்லனாக ஒரு கலக்கு கலக்கினார்.

மார்க் ஆண்டனி: ரஜினிகாந்த் ஸ்க்ரீனில் வந்தால் அவரைத் தவிர்த்து வேறு யார் மீதும் கண்கள் போகாது. ஆனால் அந்த விதியையும் மாற்றிக்காட்டியவர் ரகுவரன். பாட்ஷா படத்தில் அவர் ஏற்றிருந்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் எல்லாம் இனிமேல் யாரும் செய்ய முடியாதது. பாட்ஷாவாக நடிக்க நான் இருக்கிறேன். ஆனால் மார்க் ஆண்டனியாக இனி யாராலும் நடிக்க முடியாது என ரஜினியேக்கூட ஒரு மேடையி புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குணசித்திர வேடம்: பொதுவாக வில்லன் நடிகர்கள் குணசித்திர வேடத்துக்கு மாறும்போது மெல்லிய தடுமாற்றம் ஒன்று ஏற்படும். ஆனால் ரகுவரனோ அதற்கும் விதிவிலக்கானவர். முகவரி, சிவப்பதிகாரம், யாரடி நீ மோகினி, சிவாஜி என அவர் குணச்சித்திர வேடங்களிலும் தனது தனித்துவமான நடிப்பை காண்பித்து அசால்ட்டாக ஸ்கோர் செய்திருப்பார்.

திருமணமும், பிரிவும்: நடிகை ரோகிணியை ரகுவரன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரிஷி என்ற ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் சில மன கசப்புகளால் ரோகிணியும், ரகுவரனும் பிரிந்துவிட்டார்கள். இருந்தாலும் இருவரும் மகன் மீது அதீத பாசம் வைத்திருந்தனர். குறிப்பாக ரகுவரனுக்கு ரிஷி மீது அளவு கடந்த பாசம். ரிஷி எதை கேட்டாலும் உடனே வாங்கிக்கொடுத்துவிடுவார்.

ரிஷியா இது?: இத்தனை வருடங்களாக ரிஷி எப்படி இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் ரகுவரனின் மகன் ரிஷியின் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. நடிகை ரோகிணி தனது மகன் ரிஷியுடன் இணைந்து ஃபன் செய்வது போன்றும், உடற்பயிற்சி செய்வது போன்றும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் ரிஷி அச்சு அசலாக ரகுவரன் போன்றே இருக்கிறாரே என ஆச்சரியத்தில் அந்த வீடியோவை ட்ரெண்டாக்கிவருகின்றனர். அதுமட்டுமின்றி அவரது தோற்றத்தை பார்த்த ரசிகர்கள், கண்டிப்பாக ரிஷி சினிமாவில் ஹீரோவாகவே நடிக்கலாம். அந்த அளவுக்கு அழகாக இருக்கிறார் என்றும் சொல்லிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X