பிளீஸ், குடும்பத்தை வரச் சொல்லுங்களேன்.. சிறைக்குள் தீபாவளியை இப்படி கொண்டாடிய பிரபல நடிகைகள்!
பெங்களூரு: தீபாவளியை, வித்தியாசமாகக் கொண்டாடி உள்ளனர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல நடிகைகள்.
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய குற்றப்பிரிவு
கன்னடப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், கன்னட சினிமாவில் இளம் நடிகர், நடிகைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதாகப் புகார் கூறியிருந்தார். போதைப் பொருள் பயன்படுத்தும் கன்னட நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலையும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அவர் ஒப்படைத்தார்.

அக்ரஹாரா சிறை
இதையடுத்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்கள் நண்பர்கள் உட்பட 14 பேரை கைது செய்தனர். இவர்களின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வித்தியாச வாழ்த்து
இந்நிலையில், தீபாவளியை கொண்டாடுவதற்கு சிறை அதிகாரிகளிடம் நடிகைகள் ராகிணி, மற்றும் சஞ்சனா கல்ராணி தங்கள் குடும்பத்தினரை சிறைக்கு வரவழைக்கும்படி கூறியதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் தீபாவளி பண்டிகைக்காக வித்தியாசமான முறையில் சிறை அதிகாரிகளுக்கு ராகிணி வாழ்த்து கூறியுள்ளார்.

வாழ்த்து அட்டை
சிறையில் உள்ள பேப்பர்கள் மூலமாக நடிகை ராகிணி தீபாவளி வாழ்த்து அட்டைகளை தயாரித்துள்ளார். அதை சிறை அதிகாரிகளுக்கு நடிகை ராகிணி திவேதி கொடுத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்களும் பதிலுக்கு இவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சிறை கோயில்
தீபாவளி பண்டிகைக்காக, சிறையிலேயே சக பெண் கைதிகளுடன் சேர்ந்து நடிகைகள் ராகிணி, சஞ்சனா தீப விளக்கேற்றி கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது. சிறையில் இருக்கும் கோவிலில் இருவரும் சாமி தரிசனம் செய்ததாகவும் தெரிகிறது. இவர்களுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்காததால் வருத்தத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











