மன ஆரோக்கியத்தை மேம்படுத்த.. சிறைச்சாலை லைப்ரரியில் புத்தகம் வாசிக்க ஆர்வம் காட்டும் பிரபல நடிகைகள்!

By

பெங்களூரு: சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் சஞ்சனாவும் ராகிணி திவேதியும் புத்தகம் வாசிப்பதில் அதிக நேரம் செலவிடுவதாகக் கூறப்படுகிறது.

போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், கன்னட சினிமா நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் சம்மந்தபட்டு இருந்தது தெரியவந்தது.

ராகிணி திவேதி

ராகிணி திவேதி

தொடர்ந்து நடத்திய விசாரணையில், போதைப் பொருட்களைப் பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தொடர்பாக, கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்களுடைய நண்பர்கள் உள்பட சிலர் முதலில் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமாக

சட்டவிரோதமாக

இந்த வழக்கில் பின்னர் மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக அவர்கள் சொத்து சேர்த்து இருப்பதும் தெரியவந்துள்ளதை அடுத்து, அமலாக்கத் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

தினமும் மோதல்

தினமும் மோதல்

இந்நிலையில், சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டு இருந்த சஞ்சனாவும் ராகிணியும் தினமும் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. நடிகை ராகிணி, இரவில் புத்தகம் படிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. நள்ளிரவு வரை ராகிணி படிப்பதால், அதே அறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சனா கல்ராணியால் தூங்க முடியவில்லையாம்.

வெவ்வேறு அறை

வெவ்வேறு அறை

இதனால் லைட்டை அணைப்பது தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டு வந்தது. இதுபற்றி சிறை நிர்வாகத்துக்கு தகவல் சென்றதாகக் கூறப்படுகிறது. போதை வழக்கில் கைதாகி இருப்பதால், இவர்களுக்கு தனி அறை ஒதுக்க சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்களை வெவ்வேறு அறைகளுக்கு மாற்றியுள்ளனர்.

புத்தகம் வாசிப்பு

புத்தகம் வாசிப்பு

இதற்கிடையே, இருவரும் இப்போது புத்தகம் வாசிப்பதில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். ராகிணி, புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சஞ்சனாவும் புத்தகங்களை சிறைச்சாலையில் படித்துவருவதாகக் கூறப்படுகிறது.

ஜாமீன் மனுக்கள்

ஜாமீன் மனுக்கள்

சிறையில் இருப்பவர்களிடம், காலையில் நடக்கும் சோதனையின்போது சினிமா தொடர்பான விஷயங்களையும் அவர்கள் பகிர்ந்துகொள்வதாகக் கூறப்படுகிறது. ராகிணி மற்றும் சஞ்சனாவின் ஜாமீன் மனுக்கள் இரண்டு முறை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X