'உன்னால என் தூக்கமே போச்சு..' சிறையில் அடைக்கப்பட்ட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா திடீர் மோதல்!
பெங்களூரு: போதைப்பொருள் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் ராகிணி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் மோதிக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னட சினிமாவில், போதைப் பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராகிணி திவேதி
போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்களுடைய நண்பர்கள் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பரப்பனஅக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

5 நாட்கள் விசாரணை
போலீஸ் விசாரணையில், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததும் தெரியவந்துள்ளது. இதுபற்றி அமலாக்கத்துறையினர் நடிகைகள் ராகிணி, சஞ்சனாவிடம் 5 நாட்கள் விசாரணை நடத்தினர்.

நடிகைகள் மோதல்
இந்த நிலையில், பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ராகிணியும், சஞ்சனாவும் மோதிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறையில் இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடிகை ராகிணி, எப்போதும் சக கைதிகளுடன் பேசிக் கொண்டு இருக்கிறாராம்.

தூங்க முடியவில்லை
இரவில், புத்தகம் படிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. நள்ளிரவு வரை ராகிணி புத்தகம் படிப்பதால், அதே அறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சனாவால் தூங்க முடியவில்லையாம். இதனால் லைட்டை அணைப்பது தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video

உடற்பயிற்சி
அதே நேரத்தில் சஞ்சனா, அதிகாலையில் மின் விளக்கை எரிய விட்டபடி யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்வதாகவும் இதன் காரணமாக தனது தூக்கம் கெடுவதாக ராகிணி புகார் கூறியதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் மோதிக் கொள்வதாகவும் அதிகாரிகள் சமரசம் செய்து வைப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











