போதைப் பொருள் மருத்துவப் பரிசோதனை.. சிறுநீர் மாதிரியில் தண்ணீர் சேர்த்து நடிகை ராகிணி சீட்டிங்!
பெங்களூரு: போதைப்பொருள் மருத்துவ பரிசோதனையின் போது சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து ஏமாற்ற நடிகை ராகினி திவேதி முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போதை பொருள் விவகாரம், கன்னட சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விவகாரத்தில் மேலும் சில சினிமா நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

ராகிணி திவேதி
இந்த வழக்கில் பிரபல கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

மருத்துவ பரிசோதனை
பெங்களூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை, கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக, பெங்களூர் கே.சி. அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடிகை சஞ்சனா மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்தார். போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நம்பிக்கை போய்விட்டது
அவர் கூறும்போது, 'போலீஸ் மீதான நம்பிக்கை போய்விட்டது. நான் எதற்காக கைது செய்யப்பட்டேன் என்று தெரியவில்லை. காரணத்தையும் சொல்லவில்லை. எனக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டால், அது என்னுடையதாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எனது வழக்கறிஞர்கள் ரத்த பரிசோதனைக்கு மறுப்பு தெரிக்கும்படி கூறியிருக்கிறார்கள் என்றார்.

சிறுநீர் மாதிரி
பின்னர் நீதிமன்ற உத்தரவை காட்டிய பின் பரிசோதனை செய்து கொண்டார். இந்த பரிசோதனை முடிவுகள் வர ஏழு நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இந்த வழக்கின் முக்கிய நடிகை ராகிணி திவேதி தனது சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து மருந்துவ பரிசோதனைக்கு கொடுத்துள்ள தகவல் இப்போது தெரியவந்துள்ளது.

மீண்டும் ஒரு முறை
நடிகை ராகிணி, சிறுநீரில் தண்ணீர் கலந்து சீட்டிங் செய்ததாகக் கூறி மல்லேஸ்வரத்தில் உள்ள கே.சி பொது மருத்துவமனையின் மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதை சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் என்பதால் அவர் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் ஒரு முறை சிறுநீர் மாதிரியை அவரிடம் வாங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











