twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இப்போதைய தேவை அதுதான்..' 140 நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வரும் ராகிணி.. தந்தை மகிழ்ச்சி!

    By
    |

    பெங்களூரு: ஜாமீனில் வரும் ராகிணி திவேதியின் உடலையும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த விரும்புவதாக அவர் தந்தை தெரிவித்துள்ளார்.

    போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்லியில் உள்ள தெருவுக்கு.. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயர்.. கவுன்சிலர் தகவல்! டெல்லியில் உள்ள தெருவுக்கு.. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயர்.. கவுன்சிலர் தகவல்!

    இந்த விவகாரத்தில். நடிகைகள் ராகிணி திவேதியை போலீசார் செப்டம்பர் 4 ஆம் தேதி கைது செய்தனர்.

    மனுக்கள் தள்ளுபடி

    மனுக்கள் தள்ளுபடி

    பின்னர் நடிகை சஞ்சனா கல்ராணி, அவர் நண்பர்கள் உள்பட 14 பேரை கைது செய்தனர். இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, இவர்கள் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நடிகை ராகிணியின் ஜாமீன் மனு, சில முறை நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மருத்துவ காரணம்

    மருத்துவ காரணம்

    இந்த மனு மீதான விசாரணை, கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, நடிகை சஞ்சனா கல்ராணிக்கு மருத்துவ காரணங்களின் அடிப்படையில் கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

    உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றம்

    மாதம் ஒரு நாள் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் 3 மாதத்துக்குப் பிறகு அவர் சிறையில் இருந்து வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில் நடிகை ராகிணி திவேதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று வந்தது.

    சுமார் 140 நாள்

    சுமார் 140 நாள்

    அப்போது நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இதையடுத்து சுமார் 140 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு அவர் வீட்டுக்கு திரும்புகிறார். அவரை சிறையில் இருந்து ஜாமீனில் எடுக்க அதிக முயற்சி எடுத்தவர் ராகிணியின் தந்தை கர்னல் ராகேஷ் குமார். அவர் கூறும்போது, ராகிணி வீட்டுக்கு வருவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம்.

    மன ஆரோக்கியம்

    மன ஆரோக்கியம்

    எங்களுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது. அவரை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என்றார். அவர் மேலும் கூறும்போது, இப்போது ராகிணிக்கு போதுமான ஓய்வு தேவைப்படுகிறது. அவர் வேறு வேலையை தொடங்கு முன்பு, உடலையும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வேண்டும் என விரும்புகிறோம் என்றார்.

    English summary
    Ragini Dwivedi's father, Col. Rakesh Kumar Dwivedi says, We are delighted that Ragini will finally be home'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X