காலையில் இட்லி வடை, இரவில் சாம்பார் சாதம்.. கைது செய்யப்பட்ட நடிகை ராகிணிக்கு சலுகைகள் இல்லை!
பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ராகிணி திவிவேதியின் ஜாமீன் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
Recommended Video
பெங்களூருவில் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை பயன்படுத்திய விவகாரத்தில் நடிகை ராகிணி திவிவேதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ரவிசங்கர் என்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ராகிணியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகளிர் பாதுகாப்பு மையம்
நடிகை ராகிணியை, கடந்த 3 நாட்களாக காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு பதிலாக சித்தாபுராவில் உள்ள மகளிர் பாதுகாப்பு மையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் 12 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் காவல்
அவர்களில் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் சிவ பிரகாஷ் முதல் குற்றவாளியாகவும், ராகிணி 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் மேலும் சிலர் இதில் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. ராகிணியின் போலீஸ் காவல் இன்றுடன் முடிகிறது. இதன் காரணமாக இன்று அவரிடம் தீவிர விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஜாமீன் விசாரணை
நடிகை ராகிணி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. அவருக்கு ஜாமின் கிடைக்குமா? என்பது தெரியவில்லை. போலீஸ் விசாரணையில், ரவி சங்கருடன் இணைந்து பார்ட்டிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதை ராகிணி ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இட்லி, வடை, சப்பாத்தி
போலீஸ் காவலில் உள்ள ராகிணிக்கு நடிகை என்பதால் எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை. அவர் தனியறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 4 பெண் போலீசார் பாதுகாப்பு அளித்தனர். அவருக்கு வெள்ளிக்கிழமை இரவு சாம்பார் சாதம் வழங்கப்பட்டது. சனிக்கிழமை காலையில் இட்லி, வடை, சப்பாத்தி, மதியமும் இரவிலும் சாம்பார் சாதம் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்தும் பொய்
இதற்கிடையே, நடிகை ராகிணி திவிவேதியின் அம்மா ரோகிணி, வீட்டில் சமைத்த சாதம் மற்றும் அவருடைய உடைகளையும் கொண்டு வந்து கொடுக்க, மகளிர் பாதுகாப்பு மையத்துக்கு வந்தார். அப்போது, தன் மகள் மீதான புகார்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் ஜோடிக்கப்பட்டவை என்றும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











