»   »  ரியா சென், கரீஷ்மா சர்மாவின் உச்சபட்ச கவர்ச்சியோடு ராகினி எம்.எம்.எஸ் ட்ரெய்லர்!

ரியா சென், கரீஷ்மா சர்மாவின் உச்சபட்ச கவர்ச்சியோடு ராகினி எம்.எம்.எஸ் ட்ரெய்லர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : ஏக்தா கபூரின் தயாரிப்பில் 'ராகினி எம்.எம்.எஸ் ரிட்டர்ன்ஸ்' வெப் சீரிஸ் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2011-ம் ஆண்டு ராகினி எம்.எம்.எஸ் வெளியாகி வசூலில் பட்டையைக் கிளப்பியதைத் தொடர்ந்து கவர்ச்சிப் புயல் சன்னி லியோன் நடிப்பில் ராகினி எம்.எம்.எஸ் 2 கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது.

அதுவும் பெருவெற்றி பெற்றதையடுத்து அதன் தொடர் பாகங்களை வெப் சீரிஸாக எடுக்கப்போகிறோம் என அறிவித்திருந்தார்கள்.

 ராகினி எம்.எம்.எஸ் :

ராகினி எம்.எம்.எஸ் :

அமெரிக்காவின் திகில் படமான 'பாராநார்மல் ஆக்டிவிட்டி' படத்தை மையமாகக் கொண்டு டெல்லியைச் சேர்ந்த தீபிகா எனும் பெண்ணுக்கு நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட படம்தான் 'ராகினி எம்.எம்.எஸ்'. இந்தப் படத்தின் கவர்ச்சியால் வசூலில் சக்கைப்போடு போட்டதையடுத்து அடுத்தடுத்த பகுதிகள் வெளியாகின்றன.

 ராகினி எம்.எம்.எஸ் ரிட்டர்ன்ஸ் :

ராகினி எம்.எம்.எஸ் ரிட்டர்ன்ஸ் :

ரியாசென்னின் உச்சபட்சக் கவர்ச்சிக் காட்சிகளோடு உருவாகியிருக்கிறது இந்த வெப் சீரிஸ். சமீபத்தில் இந்தப் படத்திற்காக எடுக்கப்பட்ட படுக்கையறைக் காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.

ட்ரெய்லர் வெளியீடு :

கவர்ச்சி + த்ரில்லர் கதையான ராகினி எம்.எம்.எஸ்-ஸின் வெப் சீரிஸ், கல்லூரியில் படிப்பவர்கள் ஒரு வீட்டில் தங்கியிருக்கும்போது நிகழும் அமானுஷ்ய சம்பவங்களை வைத்து இந்தக் கதை உருவாகி இருக்கிறது. நடிகை ரியா சென் ரொம்பவே தாராளமாக நடித்திருக்கிறார்.

 வ்யூஸ் அள்ளுது :

வ்யூஸ் அள்ளுது :

ட்ரெய்லர் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 7.5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது ராகினி எம்.எம்.எஸ் ரிட்டர்ன்ஸ் வெப் சீரிஸின் ட்ரெய்லர்.

 எப்போ ரிலீஸ் :

எப்போ ரிலீஸ் :

'ராகினி எம்.எம்.எஸ் ரிட்டர்ன்ஸ்' வெப் சீரிஸ் வரும் செப்டம்பர் 21-ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. த்ரில்லர் ப்ரியர்களும், கவர்ச்சிப் ப்ரியர்களும் இப்போதே யூ-ட்யூப் சேனலை ட்யூன் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

English summary
The 'Ragini MMS Returns' Web Series trailer has been released. The web series has been created with the hot scenes of Riya sen.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos