போதை மாத்திரை விவகாரம்.. ஃபோனில் சிக்கிய நடிகர், நடிகைகளின் மிட்நைட் ஆதாரம்.. இன்னும் சிலருக்கு வலை!
பெங்களூரு: போதை மாத்திரை விவகாரத்தில் நடிகை ராகிணியின் நண்பர் செல்போனில் இருந்து பல தகவல்கள் கிடைத்துள்ளன.
Recommended Video
இதையடுத்து மேலும் சில சினிமா பிரபலங்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
பெங்களூருவில் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்த டிவி நடிகை அனிகா உள்பட 3 பேர் கடந்த மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

போதை மாத்திரைகள்
கைதான அனிகாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பதும் திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளின் போது போதை மாத்திரைகளை விற்று வந்ததும் தெரியவந்தது.

இந்திரஜித் லங்கேஷ்
இந்நிலையில், கன்னட சினிமாவில் நடக்கும் பார்ட்டிகளின் போது போதைப் பொருட்கள் பயன்பாடு இருப்பதாக கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு புகார் கூறியிருந்தார். இளம் நடிகர், நடிகைகள் அதைப் பயன்படுத்துவதாகக் கூறிய அவர், 15 நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

நடிகை ராகிணி கைது
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ரவிசங்கர் என்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். இவர் ஜெயாநகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரிடம் நடத்திய விசாரணையில் நடிகை ராகிணியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில், நடிகை ராகிணி திவிவேதி கைது செய்யப்பட்டார்.

ரகசிய தகவல்கள்
அவரை 5 நாள் காவலில் எடுத்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் போதை மாத்திரைகள் எங்கிருந்து கிடைத்தது என்கிற சில ரகசிய தகவல்களும் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்கிறார்கள்.

போலீஸ் கமிஷனர்
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ரவிசங்கரின் செல்போனில், பார்ட்டிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளன. அதில் பல கன்னட சினிமா பிரபலங்கள் உள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து பெங்களூரு சிட்டி போலீஸ் கமிஷனர் கமல் பன்ட் கூறும்போது, 'கைது செய்யப்பட்ட ரவிசங்கர், யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருக்கிறது என்பதை எங்களிடம் தெரிவித்துள்ளார்.

சஞ்சனா கல்ராணி
இதையடுத்து கன்னட சினிமாவில் வேறு சிலரையும் விசாரிக்க இருக்கிறோம். தொழிலதிபர் ராகுல் ஷெட்டி போதை மாத்திரைகளை சப்ளை செய்து இருக்கிறார். இதில் பல முக்கிய முன்னணி பிரபலங்கள் சம்மந்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ள ரவி ஷங்கர், நடிகை ராகிணி திவிவேதியின் நண்பர். ராகுல், நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர். இதனால் கன்னட சினிமாவில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











