ரஜினி ரகுவரன்.. நேத்து ஆன்டணிக்கு.. இன்று பாட்ஷாவுக்குப் பிறந்த நாள்!
சென்னை : ரகுவரன் சினிமாவில் அசைக்க முடியாத வில்லன் மறுபுறம் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் .ரகுவரனின் பிறந்தநாள் டிசம்பர் 11 ஆகும். ரஜினியின் பிறந்தநாள் டிசம்பர் 12 ஆகும். அடுத்தடுத்த நாளில் பிறந்துள்ள மிக பெரிய ஆளுமைகள் இவர்கள்.
ஒரு படத்தில் ஹீரோ மிக பெரிய அளவில் தெரிய வேண்டும் என்றால் அந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் மிக அழுத்தமாக இருந்திருக்க வேண்டும் ,எடுத்து காட்டிற்கு வில்லன் மிக பெரிய தந்திர காரணாக இருந்தால் தான் அந்த தந்திரத்தை ஹீரோ முறியடிக்கும் போது மக்கள் ஹீரோக்களை கொண்டாடி தீர்ப்பார்கள் .

மக்கள் கொண்டாடி தீர்த்த மிக முக்கிய நடிகர்களில் ரஜினி முக்கியமானவர் ,அவர் ஹீரோவாக ஜெயிக்க பல வில்லன்கள் அவருக்கு பக்கதுனையாக இருந்திருக்கிறார்கள் அதில் மிக முக்கியமானவர் ரகுவரன்.

ரகுவரன் வில்லனை தாண்டி நல்ல குணசித்திர நடிகரும் கூட .இவர் தமிழில் ஏழாவது மனிதன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அதற்கு பிறகு பல படங்களில் ஹீரோ வில்லன் என்று மாறி மாறி நடித்து வந்த ரகுவரன் ஒரு சமயத்திற்கு மேல் தமிழ் சினிமாவின் நிரந்தர வில்லனானார் .

ரஜினியின் பல படங்களில் ரகுவரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார் அதில் மிக முக்கிய படம் பாட்ஷா ஆகும். அதில் ரகுவரனுக்கும் ரஜினிக்கும் இருக்கும் ஹீரோ வில்லன் பகையை இதுவரையில் சினிமா ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
ரஜினியும் ரகுவரனும் மிஸ்டர் பாரத் ,மனிதன்,ஊர் காவலன் ,சிவா ,பாட்ஷா,முத்து ,அருணாச்சலம், ராஜா சின்ன ரோஜா மற்றும் சிவாஜி ஆகிய படங்களில் இனைந்து நடித்து இருப்பார்கள் .


Click it and Unblock the Notifications











