ரூ.50 லட்சம் கரன்சியுடன் பிரபல பாக். பாடகர் கைது

பல்வேறு இந்தித் திரைப்படங்களில் பாடியுள்ள இவர் இந்தியா உள்பட பல நாடுகளிலும் கஜல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பல இந்தியத் தொலைக்காட்சிகளில் பாட்டுப் போட்டிகளில் நடுவராகவும் செயல்பட்டு வருகிறார்.
துபாய் செல்ல தனது இசைக் குழுவினருடன் டெல்லி விமான நிலையம் வந்த அவரிடம் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இருந்தன. இவ்வளவு பணத்தை எடுத்துச் செல்ல அவரிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை.
இதையடுத்து அவரையும் அவரது குழுவைச் சேர்ந்த 2 பேரையும் வருமான வரித்துறையினர் கைது செய்தனர்.
இவரை விடுவிக்க பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் இந்திய வெளியுறவுத்துறையுடன் பேச்சு நடத்தி வருகிறார்.
More from Filmibeat
கான் வருமான வரித்துறை கைது டெல்லி விமான நிலையத்திலிருந்து துபாய் செல்ல முயன்ற பாகிஸ்தானின் பிரபல பாடகர் ராகத் பதே அலி khan detained airport popular pakistani singer rahat fateh ali


Click it and Unblock the Notifications











