ARR: வெட்கமா இல்லையா? அப்பா ஏ.ஆர். ரஹ்மான் குறித்து அவதூறு பேசியவர்களுக்கு பளார் விட்ட மகள் - மகன்!

சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது விவாகரத்தை அறிவித்த பின்னர், இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் அவர் எதிர் கொள்ளாத வதந்திகளையும் அவதூறுகளையும் எதிர்கொண்டு வருகின்றார் என்றுதான் கூறவேண்டும். ஆமாம் இவர் தனது விவாகரத்தை அறிவித்த அடுத்த நாளில் அவரது இசைக்குழுவில் பணியாற்றும் பெண் இசை கலைஞர் மோகினி தே தனது கணவரைப் பிரிவதாக அறிவித்தார். இதனால் ஏ.ஆர். ரஹ்மானும் அவரது இசைக் குழுவில் இருக்கும் மோகினி தேவுக்கும் இடையில் நீண்ட நாட்கள் பழக்க வழக்கம் இருப்பதாக பலரும் பலவிதமாக விமர்சித்து வந்தனர். இப்படியான நிலையில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக அவரது மகள் ரஹீமா ரஹ்மான் மற்றும் மகன் அமீன் கருத்து தெரிவித்துள்ளனர்.

திரைத்துறையில் இருப்பவர்களின் திரை வாழ்க்கை தொடங்கி, அவர்களின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கை வரை அனைத்துமே பரபரப்பை உண்டாக்கும் விஷயங்களாக மாறிவிட்டது. இதில் ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சொந்த வாழ்க்கை என்றால் யாருக்குத்தான் தெரிந்து கொள்ள ஆசை இருக்காது. ஏ.ஆர் ரஹ்மானைப் பொறுத்தவரை அவர் கடந்த சில தசாப்தங்களாகவே இந்திய இசைத் துறையில் மிகவும் முக்கியமான நபராக உள்ளார்.

ar ameen ar rahman divorce

தமிழ் திரை உலகில் இருந்து தனது இசைப்பயணத்தைத் தொடங்கி இருந்தாலும் இவரது இசை இந்தியாவைக் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியாவின் எந்த நகரில் இவர் தனது இசைக் கச்சேரியை நடத்தினாலும் அங்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துவிடுவார்கள். அந்த அளவிற்கு தனது இசை மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தனது அறிமுகப் படத்திலேயே, தேசிய விருது வென்றவர் என்ற சாதனையைப் படைத்தவர்.

ஏ.ஆர். ரஹ்மான்: இவர் மீது திரைத்துறைக்குள் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்று எதுவுமே இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் இவர் எப்போதுமே இரவு நேரங்களில் மட்டுமே இசை அமைப்பார் என்பதுதான் இவர் பற்றி திரைத்துறையில் இருக்கும் பேச்சு. ஆஸ்கார் வென்றபோதுகூட அங்கேயும் தமிழில், ' எல்லா புகழும் இறைவனுக்கே' எனக் கூறி தான் மேடையேறி அங்கீராம் பெற்றது மட்டும் இல்லாமல், தனது தாய் மொழியையும் அறியணை ஏற்றியவர்.

ar ameen ar rahman divorce

விவாகரத்து: இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது மனைவி சாராவைப் பிரிவதாக தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். இது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை, கதீஜா, ரஹிமா ரஹ்மான் மற்றும் அமீன் என மூன்று குழந்தைகள் என மிகவும் நிறைவாகச் சென்று கொண்டு இருந்த திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அவர் அறிவிக்கும்போது பலருக்கும் அதிர்ச்சிதான். இவர் தனது விவாகரத்து குறித்து தெரிவித்த அடுத்த நாளில் இவரது பேசிஸ்ட் மோகினி தேவும் தனது கணவரைப் பிரிவதாக அறிவித்தார். இதனால், பலரும் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மோகினி தேவையும் இணைத்து அவதூறாகப் பேசினர்.

ar ameen ar rahman divorce

அமீன்: இது தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மானின் மகள் ரஹிமா ரஹ்மான் மற்றும் மகன் அமீன் ஆகியோர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அமீன் தெரிவிக்கையில், " என் அப்பா ஒரு லெஜண்ட், இசைத்துறையில் அவர் செய்த சாதனைக்காக மட்டுமில்லாமல், பல ஆண்டுகளாக அவர் பெற்ற மதிப்பு, மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காகவும் அவர் லெஜண்டாக பார்க்கபடுகிறார். இணையத்தில் அவர் குறித்து வரும் ஆதரமற்ற செய்திகளால் மனம் வருந்துகின்றது. தயவு செய்து இதுபோல் செய்யாதீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ar ameen ar rahman divorce

வெட்கம்: இதுமட்டும் இல்லாமல், அவரது மகள் ரஹீமா தனது இன்ஸ்டாவில், எனது அப்பா மிகவும் தூய்மையானவர். 30 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பின்னர் அவர் இவ்வாறு முடிவெடுத்துள்ளார். அவர் குறித்து அவதூறாக செய்தியைப் பரப்பி விளம்பரம் தேடிக்கொள்ள நினைக்கும் உங்களுக்கு வெட்கமே இல்லையா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X