Rahman: காதலில் உருகிய ரசிகை... நடிகர் ரஹ்மான் மனைவியின் பெருந்தன்மை... ரியல் காதலுக்கு மரியாதை!
சென்னை: 1990களில் கோலிவுட்டில் சாக்லெட் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ரஹ்மான்.
மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோவான ரஹ்மான், தற்போது கெஸ்ட் ரோல்களில் நடித்து வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில், மதுராந்தகன் என்ற கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தன்னை நினைத்து காதலில் உருகிய ரசிகை குறித்தும், அப்போது அவரது மனைவி பெருந்தன்மையாக நடந்தது கொண்டது பற்றியும் மனம் திறந்துள்ளார் அவர்.
ரஹ்மானின் ரியல் காதலுக்கு மரியாதை
1990களில் கோலிவுட்டின் சாக்லெட் ஹீரோவாக மாஸ் காட்டியவர் ரஹ்மான். 1983ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'கூடவிடே' படத்தின் மூலம் அறிமுகமான அவர், முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருது வென்றார். தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த ரஹ்மான், 1990களில் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் டாப் ஹீரோவாக வலம் வரத் தொடங்கினார்.
தமிழில் நிலவே மலரே, வசந்த ராகம், ஒருவர் ஆலயம் ஆகிய படங்கள் ரஹ்மானுக்கு நல்ல அறிமுகம் கொடுத்தது என்றால், 'புது புது அர்த்தங்கள்' திரைப்படம் அவரை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. அதேபோல் தெலுங்கில் பாரத் பந்த் திரைப்படம் ரஹ்மானுக்கு சூப்பர் ஹிட் கொடுத்தது. அதன் பின்னர் ஃபீல்ட் அவுட் ஆன ரஹ்மான், சங்கமம் திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்தார். பில்லா முதல் பொன்னியின் செல்வன் வரை தற்போதும் பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரஹ்மான் கொடுத்துள்ள பேட்டியொன்றில் தனது மனைவி பற்றி மனம் திறந்துள்ளார். ஏஆர் ரஹ்மான் மனைவியின் தங்கையை தான் ரஹ்மானும் திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரையில் ஒரு திருமண வீட்டில் மெஹருன்னிஸா என்பவரை பார்த்துள்ளார் ரஹ்மான். அதன் பின்னர் தனது நண்பர் மூலம், மெஹருன்னிஸாவின் வீட்டில் பேசி திருமணம் செய்துகொண்டாராம்.
சினிமாவில் வெற்றி, தோல்வி என எல்லா நேரங்களிலும் தனக்கு பலமாக இருந்தது மனைவி தான் எனக் கூறியுள்ள ரஹ்மான், தீவிர ரசிகையின் காதல் குறித்தும் பேசியுள்ளார். அதாவது ரஹ்மான் நடிப்பில் பிஸியாக இருந்த நேரம், ஒரு படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ளார். அங்கு அவரது தீவிர ரசிகை ஒருவர் ரஹ்மானின் போட்டோக்களை தனது வீடு முழுவதும் ஒட்டி வைத்துள்ளார். இதனைப் பார்த்த ரஹ்மானுக்கு ரொம்பவே அதிர்ச்சியாக இருந்துள்ளது.
அப்போது அவருக்கு திருமணமும் ஆகிவிட்டதால், அந்த ரசிகை ரஹ்மானிடம் பேசவே இல்லையாம். அதுமட்டும் இல்லாமல் ரஹ்மானை பார்க்காமல் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்ற முடிவிலும் இருந்துள்ளார். பின்னர் அந்த ரசிகையை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்ததுடன், இதனை தனது மனைவியிடமும் கூறியுள்ளார் ரஹ்மான்.
இதனையடுத்து ரஹ்மானுக்கு பிறந்த முதல் பெண் குழந்தைக்கு அந்த ரசிகையின் பெயரையே வைத்துள்ளார் அவரது மனைவி. இதனை இருவருமே பேசி முடிவெடுத்து தான் பெயர் வைத்தார்களாம். அதன்பின்னர் அந்த ரசிகையும் திருமணம் செய்துகொண்டதாகவும், அவரது மகனுக்கு ரஹ்மானின் பெயரை வைத்ததாகவும் அவரே ஓபனாக பேசியுள்ளார். ரஹ்மானின் இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் இதுதான் ரியல் காதலுக்கு மரியாதை என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











