ஜோதிகாவிற்கு ஜோடியான ரகுமான்!

By Mayura Akilan

ஹவ் ஓல்ட் ஆர் யு தமிழ் ரீமேக் படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் ரகுமான் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் நம்பர் 1 நடிகையாக பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்னர் தனது கணவருடன் இணைந்து விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் அவர் மீண்டும் நடிக்க வருகிறார் என்று அடிக்கடி செய்திகள் வெளியானாலும் அதை அவர் உறுதி படுத்தவில்லை.

மீண்டும் ஜோதிகா

மீண்டும் ஜோதிகா

இந்த நிலையில் ஜோதிகா மீண்டும் நடிக்க வருவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. மலையாளத்தில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய 'ஹவ் ஓல்ட் ஆர் யு' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப் போகிறார் என அறிவித்தனர். அந்தப் படத்தை சூர்யாவின் சொந்தப் பட நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளது.

சம்மதித்த ரகுமான்

சம்மதித்த ரகுமான்

இந்தப் படம் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் ஜோதிகாவின் ஜோடியாக நடிக்க வேண்டிய கதாபாத்திரத்திற்காக பல நடிகர்களை அணுகியிருக்கிறார்கள். ஆனால் பல ஹீரோக்கள் நடிக்க தயங்கினார்களாம். கடைசியாக ஜோதிகா ஜோடியாக நடிக்க ரகுமான் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்பட ஹீரோ

தமிழ்பட ஹீரோ

90 களில் தமிழ் சினிமா உலகில் குறிப்பிடத்தக்க நாயகர்களில் ஒருவராக இருந்த ரகுமான் பல தமிழ், மலையாளப் படங்களில் ஹீரோவாக நடித்து உள்ளார்.

சிங்கம் 2 வில்லன்

சிங்கம் 2 வில்லன்

கடந்த சில வருடங்களாகவே தமிழில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் ரகுமான் நடித்து வருகிறார். சூர்யாவின் சிங்கம் 2 படத்தில் இவரது வில்லன் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டினை பெற்றது.

ஜோதிகாவுக்கு ஜோடி

ஜோதிகாவுக்கு ஜோடி

இந்த நிலையில் ஜோதிகாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ரகுமான். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் சூட்டிங் நவம்பர் 17ம் தேதி துவங்குகிறது.

நவம்பரில் சூட்டிங்

நவம்பரில் சூட்டிங்

டைரக்டர் ரோஷன் ஆன்ட்ரிவ் இந்த படத்தை இயக்குகிறார். தற்போது அவர் இயக்கும் மலையாள பட வேலைகளில் பிஸியாக இருப்பதால் தான் ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீமே பணிகளை நவம்பரில் துவங்க உள்ளார்களாம்.

சென்னை டூ ராஜஸ்தான்

சென்னை டூ ராஜஸ்தான்

தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ள ஹவ் ஓல்ட் ஆர் யூ படம், துவக்கத்தில் சென்னையிலும் பிறகு டெல்லி மற்றும் ராஜஸ்தானிலும் படமாக்கப்பட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X