மணிரத்னம் படத்தில் பாடகராக அறிமுகமாகும் ஏஆர் ரஹ்மான் மகன்!

By Shankar

மணிரத்னம் அடுத்து இயக்கும் புதிய படத்தில் பாடகராக அறிமுகமாகிறார் ரஹ்மானின் மகன் அமீன்.

கடல் படத்துக்குப் பிறகு ஒரு புதிய படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஹாலிவுட் பாடல்

ஹாலிவுட் பாடல்

இந்தப் படத்தில் ஒரு பாடகராக ரஹ்மானின் மகன் அமீன் அறிமுகமாகிறார். ஏற்கெனவே கடந்த 2012-ம் ஆண்டு சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் அமீன் முதல் முறையாக மேடையில் தோன்றினார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மானின் ஹாலிவுட் படம் ஒன்றில் இடம்பெற்ற பாடலைப் பாடினார்.

ரஹ்மான் பேட்டி

ரஹ்மான் பேட்டி

தற்போது மணிரத்னம் படத்தில் தந்தையின் இசையில் முதல் முறையாக தமிழில் பாடுகிறார். இதுகுறித்து சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது ரஹ்மான் கூறுகையில், ‘எனது மகனை நடிக்க வைக்க நிறைய பேர் கேட்கிறார்கள். அவனுக்கு நடிப்பு திறமையும் இருக்கிறது.

நடிப்பு வேண்டாம்

நடிப்பு வேண்டாம்

ஆனால் நான் அவன் நடிப்பதை விரும்பவில்லை. இப்போதைக்கு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தனிப்பட்ட அவனது சுதந்திரத்துக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது," என்றார்.

மணிரத்னம் படத்துக்காக

மணிரத்னம் படத்துக்காக

தொடர்ந்து அவரிடம் தந்தையும் மகனும் சேர்ந்து படங்களில் பணியாற்றுவீர்களா? என்று கேட்டதற்கு, ‘மணிரத்னத்தின் அடுத்த படத்தில் எனது மகன் அமீன் பாடுவது மட்டும் உறுதி' என்றார்.

இசைக் கச்சேரி

இசைக் கச்சேரி

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் தொடக்க விழாவுக்காக சென்னையில் வருகிற அக்டோபர் 2-ந்தேதி ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி நடக்கிறது. இதில் ரஹ்மான் இசை அமைத்த படங்களில் இருந்து 50 பாடல்கள் இடம் பெறுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X