இந்திய சினிமாவின் மிகப்பெரிய தூதர்.. சீக்கிரம் போய்விட்டார்.. ரஹ்மான் உருக்கம்
சென்னை: இர்ஃபான் கானின் மறைவுக்கு இசையமைப்பபாளர் ஏஆர் ரஹ்மான், ஷாருக் கான், சல்மான் கான் உள்ளிட்ட பிரபலங்கள் டிவிட்டரில் உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
Recommended Video
உடல் நலக்குறைவால் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இன்று அகால மரணமடைந்தார்.
கடந்த சனிக்கிழமை அவரது தாயார் மரணமடைந்த நிலையில் இன்று இர்ஃபான் கான் திடீரென மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சினிமா
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, அரசியல் பிரபலங்கள், சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், ஷாருக் கான், சல்மான் கான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரஹ்மான்
ஏஆர் ரஹ்மான் பதிவிட்டுள்ள டிவிட்டில் இந்திய சினிமாவின் மிகப் பெரிய தூதர் சீக்கிரம் போய்விட்டார் என தெரிவித்துள்ளார். மேலும் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கும் ரமலான் மாதத்தையும் குறிப்பிட்டிருக்கிறார் ரஹ்மான்.

ஷாருக் உருக்கம்
இதேபோல் நடிகர் ஷாருக்கானும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். என் நண்பர்... உத்வேகம் & நம் காலத்தின் மிகச் சிறந்த நடிகர். அல்லா உங்கள் ஆத்மாவை ஆசீர்வதிப்பார் இர்ஃபான் பாய்... நீங்கள் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தீர்கள் என்ற உண்மையை மதிக்கிற அளவுக்கு உங்களை இழப்போம்.. லவ் யு என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதயத்தில் இருங்கள்
இதேபோல் சல்மான் கான் பதிவிட்டுள்ள டிவிட்டில் சினிமாத்துறை, அவரது ரசிகர்கள், நாம் எல்லோருக்கும் குறிப்பாக அவரது குடும்பத்திற்கு பேரிழப்பு. கடவுள் அவர்களுக்கு பலத்தை அளிக்கட்டும். அமைதியுடன் ஓய்வெடுங்கள் சகோதரா, நீங்கள் எப்போதும் மிஸ் செய்யப்படுவீர்கள்.. எங்கள் இதயத்தில் இருங்கள் என குறிப்பிட்டு இருவரும் இணைந்து எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











