»   »  இசைஞானியுடன் கைகோர்ப்பேன்: ரஹ்மான்இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக அதைத் தவற விட மாட்டேன்,அதற்காக காத்துக் கொண்டுள்ளேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.3 டி இசை நிகழ்ச்சி என்ற புதுமையான நிகழ்ச்சியை உலகெங்கிலும் நடத்தவுள்ளார் ரஹ்மான். இந் நிகழ்ச்சியைக் காணவருபவர்கள் 3 டி கண்ணாடி அணிந்து கொண்டு தான் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும்.நிகழ்ச்சி நடக்கும் திறந்த வெளி மேடையில் லேசர் பீம்கள் உதவியுடன் 3 டி பரிமாணங்களை உருவாக்கி ஹை-டெக்காக இந்நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. முதல் நிகழ்ச்சி பெங்களூரில் அக்டோபர் 8ம் தேதி நடக்கிறது.இந்த நிகழ்ச்சி தொடர்பாக பெங்களூரில் நடந்த பிரஸ்மீட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார். அவர் கூறுகையில், இந்த 3டி நிகழ்ச்சி மிக அருமையாக இருக்கும், மிகவும் வித்தியாசமாகவும் இருக்கும். செவிகளுக்கு மட்டுமல்லாது கண்களுக்கும்விருந்தளிக்கும் வகையில் அமையும். தற்போது அன்பே ஆருயிரே, காட்பாதர், ஜில்லென்று ஒரு காதல் என தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்து வருகிறேன். நரேஷ்ஐயர் என்ற புதிய பாடகரை அறிமுகப்படுத்தியுள்ளேன்.இளையராஜாவின் திருவாசகம் கேட்டேன். மிகவும் அருமையான ஒர்க். ரொம்பவும் பாராட்ட வேண்டிய பணி. அந்த இசைகேட்ட நான் மயங்கினேன். அவர் நிச்சயமாக ஒரு ஞானி.அவரது பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும். என்றாலும், ஜானி படத்தில் வரும் காற்றில் எந்தன் கீதம் பாடலை எப்போதுகேட்டாலும் என்னை மறந்து விடுவேன்.இளையராஜாவும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.அதேபோல நானும், ராஜாவும் சேர்ந்து இசையமைக்கும் வாய்ப்பு வந்தால் நிச்சயம் செய்வேன். அதற்காக தயாராக காத்துக்கொண்டுள்ளேன் என்றார் ரஹ்மான்.

இசைஞானியுடன் கைகோர்ப்பேன்: ரஹ்மான்இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக அதைத் தவற விட மாட்டேன்,அதற்காக காத்துக் கொண்டுள்ளேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.3 டி இசை நிகழ்ச்சி என்ற புதுமையான நிகழ்ச்சியை உலகெங்கிலும் நடத்தவுள்ளார் ரஹ்மான். இந் நிகழ்ச்சியைக் காணவருபவர்கள் 3 டி கண்ணாடி அணிந்து கொண்டு தான் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும்.நிகழ்ச்சி நடக்கும் திறந்த வெளி மேடையில் லேசர் பீம்கள் உதவியுடன் 3 டி பரிமாணங்களை உருவாக்கி ஹை-டெக்காக இந்நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. முதல் நிகழ்ச்சி பெங்களூரில் அக்டோபர் 8ம் தேதி நடக்கிறது.இந்த நிகழ்ச்சி தொடர்பாக பெங்களூரில் நடந்த பிரஸ்மீட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார். அவர் கூறுகையில், இந்த 3டி நிகழ்ச்சி மிக அருமையாக இருக்கும், மிகவும் வித்தியாசமாகவும் இருக்கும். செவிகளுக்கு மட்டுமல்லாது கண்களுக்கும்விருந்தளிக்கும் வகையில் அமையும். தற்போது அன்பே ஆருயிரே, காட்பாதர், ஜில்லென்று ஒரு காதல் என தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்து வருகிறேன். நரேஷ்ஐயர் என்ற புதிய பாடகரை அறிமுகப்படுத்தியுள்ளேன்.இளையராஜாவின் திருவாசகம் கேட்டேன். மிகவும் அருமையான ஒர்க். ரொம்பவும் பாராட்ட வேண்டிய பணி. அந்த இசைகேட்ட நான் மயங்கினேன். அவர் நிச்சயமாக ஒரு ஞானி.அவரது பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும். என்றாலும், ஜானி படத்தில் வரும் காற்றில் எந்தன் கீதம் பாடலை எப்போதுகேட்டாலும் என்னை மறந்து விடுவேன்.இளையராஜாவும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.அதேபோல நானும், ராஜாவும் சேர்ந்து இசையமைக்கும் வாய்ப்பு வந்தால் நிச்சயம் செய்வேன். அதற்காக தயாராக காத்துக்கொண்டுள்ளேன் என்றார் ரஹ்மான்.

Subscribe to Oneindia Tamil

வேலைக்கார சிறுமியை சித்ரவதை செய்த வழக்கில் நடிகை அனாமிகாவுக்கு சென்னை நீதிமன்றம் முன் ஜாமீன்வழங்கியுள்ளது.

நடிகை அனாமிகா வீட்டில் வேலை பார்த்து வந்த புஷ்பலதா என்ற சிறுமியை அனாமிகாவும், அவரது குடும்பத்தினரும்சித்ரவதை செய்ததாக புகார் கிளம்பியது. இதுதொடர்பாக புஷ்பலதாவின் தந்தை மோகன் சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதில், எனது மகள் புஷ்பலதா அனாமிகா வீட்டில் 3 வருடமாக வேலை பார்த்து வந்தாள். மாதம் ரூ. 1000 சம்பளம் தருவதாககூறி அனாமிகா குடும்பத்தினர் எனது மகளை கூட்டிச் சென்றனர். ஆனால் அங்கு எனது மகள் கொடுமைப்படுத்தப்பட்டார்.

மேலும் சம்பளப் பணத்தையும் சரியாக கொடுக்கவில்லை. அவர்கள் கூறியபடி மாதம் ரூ. 1000 கொடுக்கவில்லை. 3ஆண்டுகளிலும் மொத்தமாகவே அவ்வளவு தான் கொடுத்துள்ளனர். இன்னும் ரூ.65,000 சம்பளப் பாக்கியை அவர்கள் தரவேண்டும்.

அனாமிகாவின் சகோதரர் நாகராஜன் திருப்பதியில் பெரிய ரவுடி. மேலும் அவர்கள் செய்த சித்ரவதை காரணமாக எனதுமகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கையில் சூடு போட்டுள்ளனர். வாயில் ரத்தம் வந்துள்ளது. எனவே எனது மகளது சம்பளப்பாக்கியை பெற்றுத் தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக போலீஸார் அனாமிகா மீதும், அவரது சகோதரர் நாகராஜன் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்துஇருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன், இருவரும் கைது செய்யப்பட்டால் ரூ. 50,000 ரொக்க ஜாமீனில் விடுதலைசெய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil