மேகா ஆகாஷ் திருமணம்.. மணமக்களை வாழ்த்திய ராகுல் காந்தி.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி திருநாவுக்கரசரின் இரண்டாவது மகன் சாய் விஷ்ணுவுடன் நடிகை மேகா ஆகாஷ் சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், மணமக்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படங்களை நடிகை மேகா ஆகாஷ் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

'லை' எனும் தெலுங்கு படத்தில் 2017ம் ஆண்டு நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் மேகா ஆகாஷ். தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட, தனுஷ் உடன் இணைந்து எனை நோக்கிப் பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து 2019ம் ஆண்டு கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

megha akash rahul gandhi marriage

சாய் விஷ்ணுவை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 15ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

நடிகை மேகா ஆகாஷ்: பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், எனை நோக்கிப் பாயும் தோட்டா, ஒரு பக்க கதை, குட்டி ஸ்டோரி, சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும், யாதும் ஊரே யாவரும் கேளீர், சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மேகா ஆகாஷ் தனது காதலர் சாய் விஷ்ணுவை கடந்த செப்டம்பர் 15ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி திருநாவுக்கரசரின் இரண்டாவது மகன் சாய் விஷ்ணுவை காதலித்து வந்த மேகா ஆகாஷ் அவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். திருமணத்துக்கு வர முடியாத நிலையில், தற்போது ராகுல் காந்தி மணமக்களை நேரில் சந்தித்து ஆசி வழங்கி உள்ளார்.

megha akash rahul gandhi marriage

ராகுல் காந்தி ஆசிர்வாதம்: காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அவருடைய ஆசிர்வாதத்தை பெற்றுள்ளோம் என நடிகை மேகா ஆகாஷ் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் சாய் விஷ்ணு மற்றும் மாமனார் திருநாவுக்கரசர் உடன் ராகுல் காந்தி அருகே நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

தொடர்ந்து நடிப்பேன்: சினிமாவில் இருந்து திருமணத்துக்குப் பிறகு ஓய்வு பெறுவாரா மேகா ஆகாஷ் என்கிற கேள்விக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அதெல்லாம் ஓல்டு ஃபேஷன். தற்போது பல நடிகைகளும் திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடித்து வருகின்றனர். நானும் தொடர்ந்து நடிப்பேன் எனக் கூறியுள்ளார். சஹ குடும்பானாம் மற்றும் இன்னொரு தெலுங்கு படத்தில் தற்போது மேகா ஆகாஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X