மிஸ்டர் மோடி.. தமிழர் பெருமையை டீமானிடைஸ் பண்ணிடாதீங்க! - ராகுல் காந்தி சுளீர் #MersalVsModi
டெல்லி: மெர்சல் படத்தில் தலையிட்டு தமிழர் பெருமையை டீமானிடைஸ் (மதிப்பிழப்பு) செய்து விட வேண்டாம் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.
டீமானிடைசேஷன், ஜிஎஸ்டி, ஏழைகளுக்கு மருத்துவம் மறுக்கப்படுதல் என மக்கள் பிரச்சினைகளை மாஸ் ஹீரோ மூலம் பேசியது மெர்சல் படம்.

இது ஆளும் பாஜகவுக்கு ஆத்திரமூட்ட, அதன் தலைவர்கள் வாய்க்கு வந்தபடி படத்துக்கு எதிராகப் பேசிக் கொண்டே உள்ளனர். கருத்து, படைப்பு சுதந்திரத்தின் மீது விழுந்த அடியாக அனைத்துக் கட்சிகளும் இதனைப் பார்க்கின்றன.
தேசிய அளவில் பெரும் பரபரப்பையும் கேள்விகளையும் எழுப்பிவிட்டது பாஜகவின் இந்த அடக்குமுறை.
இந்த நிலையில் மெர்சல் குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸும் கருத்து தெரிவித்துள்ளது. அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி இதுகுறித்து ட்விட்டரில் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டில், "மிஸ்டர் மோடி, தமிழ் கலாசாரம் மற்றும் தமிழ் மொழி உணர்வின் ஆழமான வெளிப்பாடுதான் சினிமா. மெர்சல் படத்தில் தலையிடுவதன் மூலம் தமிழர் பெருமையை டீமானிடைஸ் பண்ண தயவு செய்து முயற்சிக்க வேண்டாம்," என்று கூறியுள்ளார்.
மிகவும் ஷார்ப்பான இந்த ட்வீட்டுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications