ஆண் தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைத்தார்: நடிகர் பரபரப்பு புகார்
Recommended Video

மும்பை: தயாரிப்பாளர் முஸ்தாக் ஷேக் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் ராகுல் ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
பிரபலங்கள் மீது நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான ராகுல் ராஜ் சிங் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான முஸ்தாக் ஷேக் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராகுல் ராஜ் சிங் கூறியிருப்பதாவது,

பாலிவுட்
நான் 2004ம் ஆண்டு கிராசிம் மிஸ்டர் இந்தியா மாடலாக தேர்வானேன். அப்பொழுது எனக்கு 19 வயது. இரண்டு ஆண்டுகள் கழித்து தான் தயாரிப்பாளர் முஸ்தாக் ஷேக்கை சந்தித்தேன். அந்த நேரத்தில் பாலிவுட்டில் முஸ்தாக் அதிகாரம் படைத்த நபர். அவர் என்னை பார்த்து இம்பிரஸ் ஆனார். சரி நமக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன்.

வீடு
ஒரு நாள் இரவு 11 மணிக்கு எனக்கு போன் செய்து என்னை அவர் வீட்டிற்கு வரவழைத்தார். அவர் வீட்டில் ஒரேயொரு அறை, படுக்கை, பட போஸ்டர்கள் இருந்தன. நான் உனக்கு ஒன்று செய்யப் போகிறேன், அதை நீ என்ஜாய் செய்வாய் என்றார். எனக்கு பயம் வந்துவிட்டது. நான் உங்களின் நண்பன். அனைத்து உறவுகளும் செக்ஸை அடிப்படையாக கொண்டது இல்லை என்று நான் கூறினேன். அதற்கு அவரோ, அடுத்த முறை நீ தயாராகிவிடுவாய் என்றார். அதன் பிறகு முக்தா ஆர்ட்ஸ் பட வாய்ப்பை இழந்தேன்.

முஸ்தாக்
முஸ்தாக்குடன் படுக்கைக்கு செல்ல மறுத்ததால் பல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தேன். அம்பர் தாரா என்ற தொலைக்காட்சி தொடருக்கு என்னை தேர்வு செய்தார்கள். தேசிய தொலைக்காட்சியில் கண் பார்வையற்ற ஹீரோவாக நடித்து பிரபலமான முதல் நடிகர் நான் தான். அப்போது முஸ்தாக் எனக்கு போன் செய்து அவர் தான் என்னை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ததாக கூறினார். அதை கேட்டு நொந்து போனேன்.

பாலியல் தொல்லை
மாதா கி சவ்கி என்ற நிகழ்ச்சியில் என்னை ஒப்பந்தம் செய்தார்கள். அந்த நிகழ்ச்சியில் நான் தொடர வேண்டும் என்றால் நான் அவருடன் படுக்கையை பகிர வேண்டும் என்றார் முஸ்தாக். நான் மறுக்கவே என்னை அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கினார்கள். நான் கணேஷ் லீலா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது முஸ்தாக் என்னுடன் இரவு நேரத்தில் காரில் செல்ல வேண்டும் என்றார்.

இரவு நேரம்
காரில் சென்றபோது அவர் என் தலை தனது பக்கம் திருப்பி என் சட்டையை கழற்றினார். எனக்கு கோபம் வந்து காரை நிறுத்திவிட்டு உங்களை நடுக்காட்டில் விட்டுச் சென்றுவிடுவேன் என்றேன். நான் அந்த காலத்திலேயே மாதம் ரூ. 3 முதல் ரூ. 4 லட்சம் சம்பாதித்தேன். முஸ்தாக்கால் தான் நான் சின்னத்திரையை விட்டு விலகினேன். வாய்ப்புக்காக யாருடனும் படுக்கையை பகிர முடியாது என்றார் ராகுல் ராஜ் சிங்.


Click it and Unblock the Notifications











