கார்கிலில் கடும் குளிரில் ஷூட்டிங்.. பிரபல நடிகருக்கு மூளை பக்கவாதம்.. மருத்துவமனையில் அனுமதி!

By

மும்பை: கடுமையான குளிரில் நடந்த படப்பிடிப்பு காரணமாக, பிரபல நடிகருக்கு திடீரென மூளை பக்கவாத நோய் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல இந்தி நடிகர் ராகுல் ராய். இவர் மகேஷ் பட் இயக்கிய ஆஷிக்கி (Aashiqui) என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

சூப்பர் ஹிட்டான இதில் அனு அகர்வால் ஹீரோயினாக நடித்தார். தீபக் திஜோரி, அவ்தார் கில் உட்பட பலர் இதில் நடித்தனர்.

சப்னே சஜன் கே

சப்னே சஜன் கே

இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, ராகுல் ராய்க்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஜுனூன், சப்னே சஜன் கே, கேம், பீர் கபி, 2016 த எண்ட், ஆக்ரா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பல சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, அதில் வெற்றிபெற்றவர் இவர்தான்.

கார்கிலில் ஷூட்டிங்

கார்கிலில் ஷூட்டிங்

அவர் இப்போது டிஜிட்டலுக்காக உருவாக்கப்படும் LAC- Live The Battle என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நிஷாந்த் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கார்கிலில் நடந்து வந்தது. அங்கு வழக்கத்தை விட இப்போது கடுமையான குளிர் இருக்கிறது.

மும்பை மருத்துவமனை

மும்பை மருத்துவமனை

மைனஸ் 15 டிகிரி குளிரில் ஷூட்டிங் நடந்ததாகக் கூறப்படுகிறது. கடும் குளிர் காரணமாக ராயின் உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் உடனடியாக மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், உடல்நிலை மேலும் மோசமானதை அடுத்து, மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சேர்த்தனர்.

மூளை பக்கவாதம்

மூளை பக்கவாதம்

பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மூளை பக்கவாதம் (brain stroke) ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மூளையில் ஆபரேஷன் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

ராணுவ மருத்துவமனை

ராணுவ மருத்துவமனை

இதுபற்றி அவருடன் நடித்த நடிகர் நிஷாந்த் கூறும்போது, அவர் உடல்நிலை சரியில்லாததை அடுத்து கார்கிலில் ராணுவ மருத்துவமனையில் சேர்த்தோம். பின்னர் ராணுவ ஹெலிகாப்டரில் ஶ்ரீநகர் வந்து, பின்னர் மும்பை கொண்டு வரப்பட்டார். நாங்களும் ஒன்றாகவே அவருடன் வந்தோம். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X