twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விடிய விடிய நடிகர் விஜய் வீட்டில் ரெய்டு.. டிரெண்டாகும் #WeStandWithVIJAY ஹாஷ்டேக்.. பெருகும் ஆதரவு

    |

    Recommended Video

    Thalapathy Vijay Home IT Ride | AGS Entertainments | Master Shooting

    சென்னை: பனையூரில் உள்ள விஜய் வீட்டில் வைத்து விடிய விடிய வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு உட்பட்ட இடங்களில் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத 24 கோடி பணம் சிக்கியதாக தகவல்கள் வந்துள்ளன.

    இந்நிலையில், தளபதி ரசிகர்கள் #WeStandWithVIJAY என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி விடிய விடிய நடிகர் விஜய்க்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    நயன்தாராவுடன் நடிக்கிறார்.. மீண்டும் இணையும் நானும் ரவுடிதான் டீமில் இந்த ஹீரோயினும் இருக்காராமேநயன்தாராவுடன் நடிக்கிறார்.. மீண்டும் இணையும் நானும் ரவுடிதான் டீமில் இந்த ஹீரோயினும் இருக்காராமே

    திடீர் ரெய்டு

    திடீர் ரெய்டு

    நேற்று காலை முதலே ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நெய்வேலியில் மாஸ்டர் ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்து அவரது இல்லத்தில் விசாரித்து வருகின்றனர்.

    டிரெண்டிங்

    டிரெண்டிங்

    வருமான வரித்துறையினரின் விசாரணை வளையத்துக்குள் நடிகர் விஜய் சிக்கி உள்ள தகவலை அறிந்த தளபதி ரசிகர்கள், பல டிரெண்டிங் ஹாஷ்டேக்குகளை உருவாக்கி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். விஜய் ஹேட்டர்கள் விஜய் குறித்தும் அட்லீ குறித்தும், அர்ச்சனா கல்பாத்தி குறித்தும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

    விடிய விடிய

    விடிய விடிய நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், தளபதி ரசிகர்கள் #WeStandWithVIJAY என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி விடிய விடிய ட்வீட் போட்டு விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சுமார் 3.5 லட்சத்திற்கும் மேல் ட்வீட்கள் பதிவாகி இந்தியளவில் டிரெண்டாகி வருகின்றன.

    என்ன நடக்குது?

    வருமான வரித்துறை விசாரணை நிறைவடைந்ததா இல்லையா? என்ன நடக்குது? ஏன் இன்னும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை? நாங்க எங்க அண்ணன் விஜய்யை பார்க்கணும். தலைவா எழுந்து வா என ரசிகர்கள் தொடர்ந்து ட்வீட்களை போட்டு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    தலைவன்

    ஒருத்தன் பத்து பேர எதிர்த்தா அவன் வீரன், அதே பத்து பேர் சேர்ந்து ஒருத்தன எதிர்த்தா அவன் தலைவன். என்ன நடந்தாலும் என்றும் தளபதி விஜய் வழியில் நாங்கள் அவருக்காக துணை நிற்போம் என #WeStandWithVIJAY என்ற ஹாஷ்டேக்கை இந்த தளபதி ரசிகரும் டிரெண்ட் செய்து வருகிறார்.

    போலீஸ் பாதுகாப்பு

    போலீஸ் பாதுகாப்பு

    பனையூரில் உள்ள விஜய் வீட்டில் வைத்து அவர் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், தூப்பாக்கி ஏந்திய 7 போலீசார் விஜய் வீட்டுக்கு முன்பாக காவல் காப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் வீட்டின் முன் ரசிகர்கள் வந்து ரகளைகள் செய்யக் கூடும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    உரிமைக் குரல்

    தமிழகத்தில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முதலில் குரல் கொடுப்பவர் தளபதி விஜய் தான் என்றும், ஈழத் தமிழர் பிரச்சனை, பண மதிப்பிழப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகள் பிரச்சனை, நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா வீட்டிற்கு சென்று ஆறுதல், ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தல் என உரிமைக் குரல் கொடுக்கும் விஜய் பக்கம் நாங்கள் இருப்போம் என ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    IT Raid continuing in Vijay house. Thalapathy fans create #WeStandWithVIJAY hashtag and give their support.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X